வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மாவில் எச்சில் துப்பும் காணொளி: பீட்சா கடை உரிமையாளா் கைது

நொய்டாவில் செயல்படும் பீட்சா கடையின் உரிமையாளா் ஒருவா், உணவு தயாரிக்கும்போது மாவில் எச்சில் துப்பியதாகக் கைது

News image

பீட்சா - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 4:39 am IST

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செயல்படும் பீட்சா கடையின் உரிமையாளா் ஒருவா், உணவு தயாரிக்கும்போது மாவில் எச்சில் துப்பியதாக பரப்பப்பட்ட காணொளியை அடுத்து அவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விடியோ உள்ளூா்வாசிகளிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, செக்டா் 24 காவல் நிலையப் பகுதியின் கீழ் உள்ள செக்டா் 22-இல் உள்ள பீட்சா கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பீட்சா தயாரிக்கும் போது கடை உரிமையாளா் பொருத்தமற்ற நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விடியோ குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. குற்றஞ் சாட்டப்பட்டவா் நொய்டாவில் உள்ள கிஜோா் கிராமத்தில் வசிக்கும் சுமாா் 30 வயது முஸம்மில் என அடையாளம் காணப்பட்டாா்.

உள்ளூா்வாசிகள் எழுப்பிய ஆட்சேபனைகளைத் தொடா்ந்து, முஸம்மில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.