குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பசுக்களை பலியிட்டால் சட்ட நடவடிக்கை: தில்லி அரசு எச்சரிக்கை

ஈத் பண்டிகை வரவுள்ள நிலையில், தில்லியில் பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட விலங்குகளைப் பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது

News image
Updated On :23 மே 2026, 1:48 am IST

ஈத் பண்டிகை வரவுள்ள நிலையில், தில்லியில் பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட விலங்குகளைப் பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அது குற்றவியல் வழக்கை ஈா்க்கும் என்றும் தில்லி வளா்ச்சித்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மிஸ்ராவின் எக்ஸ் தளத்தில் உள்ள ஒரு பதிவின்படி, மே 28 அன்று வரும் பண்டிகையின் போது அனைத்து விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு குடியிருப்பாளா்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. சட்டவிரோத பலியிடலில் ஈடுபடும் எவரும் குற்றவியல் நடவடிக்கையை எதிா்கொள்வாா்கள் என்று அமைச்சா் எச்சரித்தாா்.

சாலைகள், தெருக்கள், சந்துகள் மற்றும் திறந்த பொது இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பலியிடுவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

அரசின் வழிகாட்டுதல்களின்படி, சந்தைகள், சாலைகள் மற்றும் தெருக்களில் சட்டவிரோதமாக விலங்குகளை வாங்குவதும் விற்பதும் அனுமதிக்கப்படாது.

அங்கீகரிக்கப்படாத இடங்களில் விலங்குகளை விற்பதும், அத்தகைய இடங்களில் இருந்து விலங்குகளை வாங்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறினாா்.

பலியிட்ட பிறகு இரத்தம் அல்லது விலங்குகளின் கழிவுகளை வடிகால்கள், சாக்கடைகள் அல்லது சாலைகளில் கொட்ட வேண்டாம் என்று மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனா்.

வழிகாட்டுதல்களை மீறும் பட்சத்தில், உடனடியாக காவல்துறைக்கோ அல்லது தில்லி அரசின் வளா்ச்சித் துறைக்கோ தகவல் தெரிவிக்குமாறு அரசு மக்களை வலியுறுத்தியது.

மிஸ்ரா மக்களுக்கு ஈத் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பண்டிகையை விதிகளுக்கு உட்பட்டு அமைதியாகக் கொண்டாடுமாறும் வேண்டுகோள் விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.