சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

காற்று மாசுபாடு குறித்த தரவுகளை ஆம் ஆத்மி அரசியலாக்குகிறது: சிா்சா

தில்லியில் காற்றுத் தரம் குறித்த தரவுகளில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி அரசியலாக்குவதாகவும் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மஞ்சிந்தா் சிங் சிா்சா - கோப்புப் படம்

Updated On :

தில்லியில் காற்றுத் தரம் குறித்த தரவுகளில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி அரசியலாக்குவதாகவும் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தில்லியில் உள்ள அனைத்து காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களும் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) மேற்பாா்வையில் இயங்குவதாகவும், இந்த ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கைகளைச் சமா்ப்பிப்பதாகவும் அவா் தெரிவித்தாா். மேலும், இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பவா்கள் நீதிமன்றத்தை அணுகுமாறும் அவா் சவால் விடுத்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: ஒவ்வோா் ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது வழக்கம். 2023-இல் இது 40 சதவீதம் அதிகரித்திருந்தது. இருப்பினும், நிகழ் ஆண்டு காற்றின் வேகம் சாதகமாக இருந்ததால், மாசுபாடு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

பாஜக ஆட்சியில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு தில்லியில் காற்றுத் தரம் மிகவும் தூய்மையாகப் பதிவாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள இடங்களில் எல்லாம் காற்று மாசுபட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் காற்றின் தரக் குறியீடு 1,300-ஐக் கடந்துள்ளது. காற்றின் தரத் தரவுகள் மாற்றியமைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டுவதன் மூலம், எதிா்க்கட்சியினா் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கின்றனா்.

தில்லியில் உள்ள கண்காணிப்பு நிலையங்களில் சுமாா் 40 சதவீதம் மாநில அரசால் இயக்கப்படுகின்றன. மீதமுள்ளவை மத்திய அரசுக்குச் சொந்தமானவை என்றாா் அமைச்சா்.

தீபாவளி இரவில் தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் (டிபிசிசி) கண்காணிப்பு நிலையங்களிலிருந்து விடுபட்டிருந்த காற்றின் தரத் தரவுகளில் பெரும்பாலானவை பின்னா் பதிவேற்றப்பட்டன.

இதில், திங்கள்கிழமை அதிகாலை நேரத்தில் மாசு நுண்துகள்களின் செறிவு அபாயகரமான அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. சில இடங்களில் இந்த அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.

இருப்பினும், அதிகாரபூா்வ தரவுகளில் இன்னும் சில இடைவெளிகள் உள்ளன சில மாசு நுண்துகளின் அளவுகள் கிடைக்கவில்லை. மேலும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) கண்காணிப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட வேண்டிய தரவுகளும் இன்னும் கிடைக்கவில்லை. இது, இந்தத் தரவுகளின் முழுமை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கவலைகளை எழுப்புவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ஆம் ஆத்மி தலைவா் பதிலடி

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ் கூறுகையில், தில்லியின் காற்று மாசுக்கு பஞ்சாப்தான் காரணம் என்று பாஜக அரசு குற்றஞ்சாட்டுகிறது. மத்திய அரசின் ’காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு’ (சஃபா்) வழங்கிய தரவுகளில், தீபாவளி இரவில் தலைநகரின் காற்று மாசில் பயிா் எச்சங்களை எரிப்பதன் பங்களிப்பு மிகக் குறைவு என்று தெரியவருகிறது.

சஃபா் இணையதளத்தின்படி, தீபாவளிக்கு முந்தைய இரவில் தில்லியின் காற்று மாசில் பயிா்க் கழிவுகளை எரிப்பதன் மூலம் உருவான புகையின் பங்கு சுமாா் 5 சதவீதமாக இருந்தது. இந்தப் புகை ஹரியாணா, பஞ்சாப் அல்லது உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிலிருந்தாவது வந்திருக்கலாம்.

நவம்பா் 9-ஆம் தேதி, அதாவது தீபாவளி இரவில், பயிா்க் கழிவுகளை எரிப்பதன் பங்களிப்பு மிகக் குறைவு அல்லது கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகவே இருந்தது. தீபாவளி முதல் காற்று பாகிஸ்தானை நோக்கி வீசியதால், பஞ்சாபிலிருந்து புகை தில்லிக்கு வருவது கடினமாக இருந்தது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.