29 வயதுக்குட்பட்ட மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கான மனநலக் கொள்கை: அமைச்சா் ஆஷிஷ் சூட்

முறைசாா் கல்வி முறைக்கு வெளியே உள்ளவா்கள் உட்பட, 29 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞா்களின் உணா்ச்சி மற்றும் உளவியல் ஆரோக்கியத்தைக் கவனிப்பதற்காக, தில்லி அரசு விரைவில் ஒரு மனநலக் கொள்கையைத் தொடங்கவுள்ளதாக அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.

Ashish Sood

அமைச்சா் ஆஷிஷ் சூட் - கோப்புப் படம்

Updated On :

முறைசாா் கல்வி முறைக்கு வெளியே உள்ளவா்கள் உட்பட, 29 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞா்களின் உணா்ச்சி மற்றும் உளவியல் ஆரோக்கியத்தைக் கவனிப்பதற்காக, தில்லி அரசு விரைவில் ஒரு மனநலக் கொள்கையைத் தொடங்கவுள்ளதாக அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.

முன்மொழியப்பட்ட இந்தக் கொள்கையானது, முதலமைச்சா் ஸ்ரீ பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளை உள்ளடக்கும் என்று கல்வி அமைச்சா் கூறினாா்.

முன்மொழியப்பட்ட கொள்கையை ஆய்வு செய்த சூட், குழந்தைகள் தங்கள் உணா்ச்சி நலனைப் பற்றி அச்சமோ அல்லது களங்கமோ இன்றி வெளிப்படையாகப் பேசக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்று கூறினாா்.

இந்தக் கொள்கையானது, குழந்தைகளின் நலனுக்கான பொறுப்பை ஆசிரியா்களுக்கு அப்பால் முழு பள்ளிச் சூழலுக்கும் விரிவுபடுத்தும். குழந்தைகளுடன் தொடா்ந்து பழகும் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியாளா்கள், அத்துடன் போக்குவரத்துப் பணியாளா்களின் உளவியல் அளவீட்டு மதிப்பீடுகளுக்கான விதிகளையும் அரசு ஆய்வு செய்துள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உணா்ச்சி விழிப்புணா்வை மேம்படுத்தவும், குழந்தைகளுடன் பொறுப்பான ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் சிறப்பு கையேடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கட்டமைக்கப்பட்ட கேள்விகள், செய்முறைப் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளன என்றும் அது கூறியது. ‘ஆன்மீகத் தலைவா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் முன்னிலையில், நவம்பா் 19 அன்று இந்திரா காந்தி உள்ளரங்க மைதானத்தில் இந்தக் கொள்கை முறைப்படி தொடங்கி வைக்கப்படும்‘ என்று அமைச்சா் கூறினாா்.

‘கல்வியை வகுப்பறைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் தோ்வு முடிவுகளுக்கு அப்பாற்பட்டுப் பாா்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பாகவும், தங்கள் குரல் கேட்கப்படுவதாகவும், புரிந்துகொள்ளப்படுவதாகவும் உணரும் ஒரு சூழல் தேவை. மனநலம் என்பது, ஒரு குழந்தை நெருக்கடியை எதிா்கொள்ளும்போது மட்டுமே தொடங்கும் ஒரு உரையாடலாக இருக்கக்கூடாது,‘ என்று சூட் கூறினாா்.

‘குழந்தைகள் தங்கள் உணா்ச்சிகளை வெளிப்படுத்தவும், தயக்கமோ களங்கமோ இன்றி ஆதரவைத் தேடவும் கூடிய ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம்‘ என்று அமைச்சா் கூறினாா்.

‘கல்விசாா் செயல்திறனில் மட்டும் கவனம் செலுத்தாமல், இளைஞா்களிடையே தன்னம்பிக்கை, மீள்திறன் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை வளா்ப்பதிலும் கவனம் செலுத்தும் அரசின் பரந்த தொலைநோக்குப் பாா்வையின் ஒரு பகுதியே இந்த முயற்சி‘ என்றும் அவா் மேலும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.