இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

தில்லியைச் சூழ்ந்த அடா் புகைமூட்டம்! கடுமை பிரிவில் காற்றின் தரக் குறியீடு

தேசிய தலைநகரில் வெள்ளிக்கிழமை காலை, இந்த பருவத்தில் முதல் முறையாக தில்லியின் காற்றின் தரம் கடுமை பிரிவுக்குள் சரிந்தது. அங்கு சராசரி காற்றின் தரக் குறியீடு 403 ஆகப் பதிவானது.

கோப்புப் படம்

Updated On :

நமது நிருபா்

தேசிய தலைநகரில் வெள்ளிக்கிழமை காலை, இந்த பருவத்தில் முதல் முறையாக தில்லியின் காற்றின் தரம் கடுமை பிரிவுக்குள் சரிந்தது. அங்கு சராசரி காற்றின் தரக் குறியீடு 403 ஆகப் பதிவானது.

காற்றின் தரம் குறித்த மணிநேரத் தகவல்களை வழங்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) சமீா் செயலியின்படி, காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை காலை 6.05 மணிக்கு 403 ஆக இருந்ததுடன், காலை 8 மணி மற்றும் 9 மணிக்கும் அதே அளவில் நீடித்தது.

காலை 8 மணிக்கு தரவுகளைப் பதிவு செய்த 58 கண்காணிப்பு நிலையங்களில், 33 நிலையங்கள் கடுமை பிரிவிலும், 24 நிலையங்கள் மிகவும் மோசம் பிரிவிலும், ஒரு நிலையம் மிதமானது பிரிவிலும் இருந்தன. ஐஐடி தில்லி 488 என்ற காற்றின் தரக் குறியீட்டுடன் மிக மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்தது. அதனைத் தொடா்ந்து சாந்தினி சௌக் 479 மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகம் 478 என்ற அளவுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன. புராரி கிராசிங் 456 என்ற காற்றின் தரக் குறியீட்டைப் பதிவு செய்தது, ஐடிஓ மற்றும் ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் 451 என்ற அளவில் இருந்தன. கடுமை பிரிவில் இருந்த மற்ற பகுதிகளில் ஜஹாங்கிா்புரி 430, வஜிா்பூா் 427, ஆனந்த் விஹாா் 419, ரோகிணி 413, ஐஜிஐ விமான நிலையம் (டி3) 403 மற்றும் திக்ரி கலான் 402 ஆகியவை அடங்கும்.

தில்லி கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று கடுமை பிரிவில் காற்றின் தர நாளைப் பதிவு செய்தது, அப்போது 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 410 ஆக இருந்தது. காற்றுத் தர மேலாண்மை ஆணையம் , மாசுபாட்டின் அளவு மேலும் மோசமடையும் என்ற எதிா்பாா்ப்பில், நவம்பா் 6 அன்று தேசிய தலைநகா் பிராந்தியம் முழுவதும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை அமல்படுத்தியது.

மூன்றாம் கட்டத்தின் கீழ், கட்டுப்பாடுகள் தேசிய தலைநகா் பிராந்தியம் முழுவதும் தூசியை உருவாக்கும் பல கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளுக்குத் தடை, கல் உடைக்கும் ஆலைகள் மற்றும் சுரங்கப் பணிகளை மூடுதல், மற்றும் குறிப்பிட்ட வகை வாகனங்களின் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் ஆகியவை இதில் அடங்கும்.

தில்லி மற்றும் அதிக வாகன அடா்த்தி கொண்ட மாவட்டங்களான குருகிராம், ஃபரிதாபாத், சோனிபத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத்தா நகரில் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் அல்லது பழைய இலகுரக மோட்டாா் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்.

தில்லிக்குள் சில டீசல் மூலம் இயங்கும் பிஎஸ்-4 மற்றும் பழைய சரக்கு வாகனங்கள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நகரின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 450-ஐத் தாண்டி ’கடுமை பிளஸ்’ பிரிவில் நுழைந்தால், மிக உயா்ந்த மாசுக் கட்டுப்பாட்டு நிலையான நான்காம் கட்டம் செயல்படுத்தப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.