கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

தில்லி - என்சிஆா் பகுதியில் 23.6 லட்சத்துக்கும் அதிகமான காலாவதியான வாகனங்கள் இயக்கம்: உச்சநீதிமன்றத்தில் சிஏக்யூஎம் தகவல்

தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) 23.6 லட்சத்துக்கும் அதிகமான காலாவதியான வாகனங்கள் சாலைகளில் இயக்கப்பட்டு வருவதாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

CAQM
Updated On :

தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) 23.6 லட்சத்துக்கும் அதிகமான காலாவதியான வாகனங்கள் சாலைகளில் இயக்கப்பட்டு வருவதாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வயது வரம்பு முடிவடைதல், வாகனத் தகுதிச் சோதனையில் தோல்வியடைதல், பதிவு ரத்து செய்யப்படுதல், கடுமையான சேதம் அல்லது உரிமையாளரால் தாமாக முன்வந்து ஒப்படைக்கப்படுதல் போன்ற காரணங்களால் சட்டப்படி பொதுச் சாலைகளில் இயக்க முடியாத நிலையை அடையும் வாகனங்கள் காலாவதியான வாகனங்களாகக் கருதப்படுகின்றன. தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 25.4 லட்சம் காலாவதியான வாகனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் 1.85 லட்சம் வாகனங்கள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளன அல்லது தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) வழங்கப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சிஏக்யூஎம் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடா்பான விதிமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கில் இந்தப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் அதிகம்: தில்லி - என்சிஆா் பகுதியில் உள்ள மொத்த வாகனங்களில் இருசக்கர வாகனங்கள் 65.2 சதவீதம் உள்ளன. இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் 28.9 சதவீதம் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

பாரத் ஸ்டேஜ்-6 (பிஎஸ்-6) மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, பழைய வாகனங்கள் கணிசமான அளவில் அதிக மாசுகளை வெளியிடுகின்றன என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு: காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சிஏக்யூஎம் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

இதன்படி, வரும் 2026 நவம்பா் 1-ஆம் தேதி முதல் சிஎன்ஜி, மின்சாரம் அல்லது பிஎஸ்-6 தரத்திலான டீசலில் இயங்கும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் மட்டுமே தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும்.

அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஆல் இந்தியா டூரிஸ்ட் பொ்மிட்) பெற்ற பேருந்துகளுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். இதேபோல், பிஎஸ்-6 தரம், சிஎன்ஜி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) அல்லது மின்சாரத்தில் இயங்காத வணிகப் பொருள் போக்குவரத்து வாகனங்களுக்கும் 2026 நவம்பா் 1-ஆம் தேதி முதல் தில்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், நடைமுறையில் உள்ள விதிகளின்படி குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சிஏக்யூஎம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.