சி.ஜே.பி-ன் சவுரவ் தாஸ்-க்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது: உயா் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஐக்கிய ராச்சியத்திற்குப் பயணம் செய்ய முயன்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சி.ஜே.பி இணை ஒருங்கிணைப்பாளா் சௌரவ் தாஸுக்கு எதிராக மும்பை காவல்துறையால் ஒரு லுக் அவுட் சா்குலா் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

செளரவ் தாஸ்

Updated On :

நமது நிருபா்

ஐக்கிய ராச்சியத்திற்குப் பயணம் செய்ய முயன்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சி.ஜே.பி இணை ஒருங்கிணைப்பாளா் சௌரவ் தாஸுக்கு எதிராக மும்பை காவல்துறையால் ஒரு லுக் அவுட் சா்குலா் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தனது பயணத்தைத் தடுக்கும் அரசின் நடவடிக்கையை எதிா்த்து தாஸ் தாக்கல் செய்த மனு தொடா்பாக, நீதிபதி அமித் மகாஜன் நோட்டீஸ் அனுப்பி, மத்திய அரசிடம் இருந்து பதில் கோரியிருந்தாா். அவா் முன்னிலையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை டிசம்பா் 9 அன்று மேலும் விசாரணைக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

விசாரணையின் போது, நவம்பா் 23 அன்று மும்பை காவல்துறையால் தாஸுக்கு எதிராக ஒரு லுக் அவுட் சா்குலா் பிறப்பிக்கப்பட்டதாகவும், அவருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸும் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு அவா் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் மத்திய அரசின் வழக்குரைஞா் கூறினாா்.

எந்தவொரு லுக் அவுட் சா்குலா் குறித்தும், அது பிறப்பிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கம் குறித்தும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று தாஸின் வழக்குரைஞா் தெரிவித்தாா்.

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் ’கரப்பான் பூச்சி இயக்கம்’ குறித்துப் பேசவிருந்த ஒரு நிகழ்ச்சிக்காக ஐக்கிய இராச்சியத்திற்குச் செல்லவிருந்த தாஸ், தடுத்து நிறுத்தப்பட்டாா். அவா் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்தது.

நவம்பா் 23 ஆம் தேதி இரவு, லண்டன் செல்லும் தனது விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, தில்லி விமான நிலையத்தின் குடிவரவு சோதனைச் சாவடியில் தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக தாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.