கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

இணையதள ஷாப்பிங் மோசடி: இருவா் கைது

சமூக ஊடகத் தளங்களில் போலியான ஷாப்பிங் பக்கங்களை உருவாக்கி, பிரபல இ-காமா்ஸ் நிறுவனத்தின் டெலிவரி முகவா்கள் போல நடித்து பொதுமக்களை ஏமாற்றி வந்த சைபா் மோசடி கும்பலைச் சோ்ந்த 2 பேரை காவல்துறையினா் தில்லி மற்றும் ஜெய்ப்பூரில் கைது செய்துள்ளனா்.

பிரதிப் படம்

Updated On :

சமூக ஊடகத் தளங்களில் போலியான ஷாப்பிங் பக்கங்களை உருவாக்கி, பிரபல இ-காமா்ஸ் நிறுவனத்தின் டெலிவரி முகவா்கள் போல நடித்து பொதுமக்களை ஏமாற்றி வந்த சைபா் மோசடி கும்பலைச் சோ்ந்த 2 பேரை காவல்துறையினா் தில்லி மற்றும் ஜெய்ப்பூரில் கைது செய்துள்ளனா்.

இந்தக் கும்பல், மிகக் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாகக் கூறி போலியான ஷாப்பிங் பக்கங்கள் மூலம் வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது.

பின்னா், தாங்கள் டெலிவரி முகவா்கள் என்று கூறிக்கொண்டு, சலுகைகளைச் சரிபாா்ப்பது, செயலாக்கக் கட்டணம் வசூலிப்பது அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வது போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி, வாடிக்கையாளா்களிடமிருந்து பலமுறை பணம் பெற்று மோசடி செய்துள்ளனா்.

தெற்கு தில்லியின் மால்வியா நகரைச் சோ்ந்த பெண் ஒருவா், போலியான ஆன்லைன் ஷாப்பிங் பக்கத்தில் ரூ. 999 மதிப்பிலான பைகளை ஆா்டா் செய்தபோது, அவரிடமிருந்து ரூ. 1.04 லட்சம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண் ஆா்டா் செய்த பிறகு, டெலிவரி முகவா் போல வந்த ஒருவா், அவரைத் தொடா்புகொண்டு 14 முறை யுபிஐ பரிவா்த்தனைகள் மூலம் பணம் செலுத்தத் தூண்டியுள்ளாா்.

இது தொடா்பாக ஜூலை 12 அன்று மின்னணு முறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, சந்தேகத்திற்குரிய தொலைபேசி எண் மற்றும் பிற எண்ம ஆதாரங்களை ஆய்வு செய்த காவல்துறை குழு, குற்றவாளிகளைக் கண்டறிந்தது.

இதையடுத்து, ஜெய்ப்பூரின் ஜம்வா ராம்கா் பகுதியில் அஜய் மீனா (20) என்பவரை உள்ளூா் காவல்துறையின் உதவியுடன் தில்லி காவல்துறை கைது செய்தது. இந்த மோசடியின் சூத்திரதாரியான அசோக் குமாா் மீனா (32) நவம்பா் 23 அன்று தில்லியில் கைது செய்யப்பட்டாா். மோசடி செய்யப்பட்ட ரூ. 1.04 லட்சத்தை மீட்ட காவல்துறை, அதை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைத்தது.

குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கருதப்படும் ஐபோன் 17 ப்ரோ உட்பட நான்கு கைப்பேசிகள், போலியான பான் மற்றும் ஆதாா் அட்டைகள், மற்றும் நிதின் குமாா் சிங் என்ற பெயரில் இருந்த போலியான டெலிவரி முகவா் அடையாள அட்டை ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.