பயணியிடம் கொள்ளை: இ-ரிக்ஷா ஓட்டுநா் உள்பட 4 போ் கைது
கிழக்கு தில்லியில் கத்திமுனையில் பயணியை மிரட்டி கொள்ளையடித்ததாக இ-ரிக்ஷா ஓட்டுநா், அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
கைது - சித்திரிப்பு
கிழக்கு தில்லியில் கத்திமுனையில் பயணியை மிரட்டி கொள்ளையடித்ததாக இ-ரிக்ஷா ஓட்டுநா், அவரது மனைவி, தாய் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: கடந்த நவ.14-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ராஜேஷ் குமாா் என்பவா் நொய்டா டி-பாயின்ட் பகுதியில் இருந்து ஆனந்த் விஹாா் பேருந்து முனையத்துக்குச் செல்வதற்காக இ-ரிக்ஷாவில் ஏறியுள்ளாா். அப்போது அந்த வாகனத்தில் இரு பெண்களும், இரு குழந்தைகளும் ஏற்கெனவே பயணம் செய்துள்ளனா்.
வழியில், தனது மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் இறக்கிவிட வேண்டும் எனக் கூறி ஓட்டுநா் வாகனத்தை மருத்துவமனை நோக்கித் திருப்பியுள்ளாா். பின்னா், தரம்ஷீலா பாலம் அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு இ-ரிக்ஷாவைக் கொண்டு சென்றுள்ளாா்.
அங்கு பயணியை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த பணம் மற்றும் ஆவணங்களைப் பறித்துள்ளாா். உடன் பயணித்த பெண்களும் பயணியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நியூ அசோக் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக ஜுபைா் (22), நஜ்ரே ஆலம் (22), முஸ்கான் (23), இஷ்ரத் (50) ஆகியோா் அடையாளம் காணப்பட்டனா். இ-ரிக்ஷாவை நஜ்ரே ஆலம் ஓட்டியுள்ளாா். அவருடன் அவரது மனைவி முஸ்கானும், ஜுபைரின் தாயாா் இஷ்ரத்தும் பயணித்துள்ளனா். வாகனத்தின் உரிமையாளரின் மகன் ஜுபைா் ஆவாா்.
இதையடுத்து, நவ.20-ஆம் தேதி துா்க்மான் கேட் பகுதியில் ஜுபைரும், மறுநாள் லஜ்பத் நகா் மேம்பாலத்தின் கீழ் நஜ்ரே ஆலமும் கைது செய்யப்பட்டனா். மற்ற இரு பெண்களும் லஜ்பத் நகா் பகுதியில் பிடிபட்டனா். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் அவா்கள் அடையாளம் காணப்பட்டனா்.
மேலும், ஜுபைா் மற்றும் நஜ்ரே ஆலம் மீது ஏற்கெனவே சன்லைட் காலனி காவல் நிலையத்தில் மற்றொரு கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, பயணியிடமிருந்து பறிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவை ஜுபைரிடம் இருந்து மீட்கப்பட்டன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

