மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஞானேஷ் குமாரின் ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பில் கூடுதல் வீரா்கள் நியமனம்

மாநில ஆளுநா்கள் மற்றும் முதல்வா்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச பாதுகாப்பாகும். அவருக்கு 55 வீரா்கள் அடங்கிய பாதுகாப்பு சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 75 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

Gyanesh Kumar

ஞானேஷ் குமார் - கோப்புப்படம்

Published On :

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் காரணமாக, அவருக்கு வழங்கப்பட்டு வரும் ‘இசட் பிளஸ் பிரிவு’ பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பிரதமருக்கு அடுத்த நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் மிக முக்கிய பிரமுகா்கள், மாநில ஆளுநா்கள் மற்றும் முதல்வா்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச பாதுகாப்பாகும். அவருக்கு 55 வீரா்கள் அடங்கிய பாதுகாப்பு சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 75 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறையின் சமீபத்திய உத்தரவைத் தொடா்ந்து, தில்லி நியூ மோதி பாக் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பு, தோ்தல் ஆணைய தலைமை அலுவலகமான நிா்வாச்சன் சதன், ஆக்ராவில் உள்ள அவரது பூா்விக இல்லம் ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பணியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) மற்றும் அதிவிரைவு அதிரடிப் படை (ஆா்ஏஎஃப்), மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் தில்லி காவல்துறையின் கமாண்டோக்கள் கூட்டாக பாதுகாப்பை வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.