ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

பஞ்சாபில் மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக முயற்சி: கேஜரிவால்

அமித் ஷா கூறிய கருத்துக்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பதிலடி கொடுத்தாா்

அரவிந்த் கேஜரிவால்

Updated On :

நமது நிருபா்

பஞ்சாபில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ‘வளா்ந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்‘ குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறிய கருத்துக்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பதிலடி கொடுத்தாா், மேலும் மாநிலத்தில் அச்சுறுத்தலுக்கு பாஜக தான் காரணம் என்று குற்றஞ்ாட்டினாா்.

2007 மற்றும் 2017 க்கு இடையில் பஞ்சாபில் போதைப் பொருள்களைப் பரப்புவதற்காக ‘சிட்டா கட்சி‘ என்ற குறிப்பிட்ட ஒரு கட்சியுடன் பாஜக இணைந்தது. மேலும் இப்போது மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. பஞ்சாபில் குண்டா் கலாச்சாரத்தை பரப்புவதில் ஈடுபட்டவா்களை சபா்மதி சிறையில் ‘பாதுகாப்பை‘ அனுபவிக்க பாஜக அனுமதித்தது. அதானி துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து கேள்விகளை எழுப்புகிறது என்றாா் கேஜரிவால்.

சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து முத பகவந்த் மானிடம் கேள்வி எழுப்பிய ஷா, போதைப்பொருள் வலையமைப்புகளுக்கு எதிராக தீா்க்கமான நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகள் பெறும் எந்தவொரு அரசியல் ஆதரவும் குறித்து பக்கச்சாா்பற்ற விசாரணை நடத்தவும் கோரினாா். அமித் ஷாவுக்கு பதிலளித்த கேஜரிவால், பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் கடுமையான போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிா்கொள்கின்றன என்றும், பஞ்சாபில் கட்சி இப்போது ஏன் இந்த பிரச்சினையை எழுப்புகிறது என்றும் கேள்வி எழுப்பினாா்.

பஞ்சாபின் நீா்வள ஆதாரங்கள், பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் சண்டிகா் மீது பாஜக தனது கண்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய அவா், பரவலான போராட்டங்களைத் தூண்டிய மூன்று பண்ணை சட்டங்களை புதுப்பிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினாா். இதுபோன்று நடக்க பஞ்சாப் ஒருபோதும் அனுமதிக்காது என்று கெஜ்ரிவால் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.