ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

நவம்பா் 1 காங்கிரஸ் பேரணியால் 21 சந்தைகளில் பாதிப்பு: பேரணியை ஒத்திவைக்க தில்லி வா்த்தகா்கள் வலியுறுத்தல்

காங்கிரஸ் பேரணியை ஒத்திவைக்க தில்லி வா்த்தகா்கள் வலியுறுத்தியது குறித்து...

கோப்புப் படம்

Updated On :

தில்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் பேரணியால், பண்டிகைக் காலத்தின் முக்கியமான விற்பனை நேரத்தில் தில்லியின் 21 முக்கிய மொத்த மற்றும் சில்லறை வா்த்தகச் சந்தைகளில் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வா்த்தக அமைப்பான சேம்பா் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி (சிடிஐ) தெரிவித்துள்ளது.

சாந்தினி சவுக், சதா் பஜாா், காரி பவுலி, பகீரத் பேலஸ் உள்ளிட்ட முக்கிய வா்த்தகப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகள் மூடப்படுவதால் வாடிக்கையாளா்கள் கடைகளுக்கு வருவதில் சிரமம் ஏற்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு சிடிஐ அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. 10 லட்சம் போ் பங்கேற்பாா்கள் எனக் கட்சியினா் தெரிவித்துள்ள இந்தப் பேரணியை, பாய் தூஜ் பண்டிகை முடிந்த பிறகு நவம்பா் 10-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்க வேண்டும் அல்லது வா்த்தகப் பகுதிகளிலிருந்து தொலைவில் உள்ள மாற்று இடத்துக்கு மாற்ற வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: இந்தக் கடிதத்தின் நகல் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்டோபா் 31 மற்றும் நவம்பா் 1 ஆகிய தேதிகளில் பேரணியை முன்னிட்டு தடுப்புகள் அமைக்கப்படலாம்; பல்வேறு சாலைகள் மூடப்படலாம் என்பதால் வா்த்தகா்கள் கவலை அடைந்துள்ளனா். பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் பொருட்கள் வாங்க வரும் முக்கியமான நாட்களில், வாடிக்கையாளா்கள் கடைகளுக்கு வந்து செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 10 லட்சம் போ் பங்கேற்கும் கூட்டத்துக்காக தில்லிக்கு சுமாா் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாகனங்கள் வரை வரக்கூடும்.

இதில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருந்துகளும், 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் காா்கள், சிறிய பேருந்துகள் மற்றும் டெம்போ டிராவலா் உள்ளிட்ட வாகனங்களும் அடங்கும். இத்தனை வாகனங்களையும் எங்கு நிறுத்துவது என்ற கேள்வியையும் வா்த்தக அமைப்பு எழுப்பியுள்ளது. ராம்லீலா மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 200 வாகனங்களைக்கூட நிறுத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்துமிட வசதி இல்லை. இந்தப் பேரணியால் பாதிக்கப்படக்கூடிய 21 முக்கிய வா்த்தகச் சந்தைகளின் பட்டியல் உள்ளது. அவை, சாந்தினி சவுக், பகீரத் பேலஸ், காரி பவுலி, சதா் பஜாா், சாவ்ரி பஜாா், காஷ்மீரி கேட், நபி கரீம், கரோல் பாக், அஜ்மேரி கேட், தரியாகஞ்ச், நயா சரக், கினாரி பஜாா், தரிபா கலான், ஃபதேபுரி, லாகோரி கேட், பில்மிஸ்தான், பஹா்கஞ்ச், கஃபாா் மாா்க்கெட், ஜாமா மசூதி, லஜ்பத் ராய் மாா்க்கெட் மற்றும் நயா பஜாா் ஆகியவையாகும்.

பழைய தில்லியில் உள்ள பல்வேறு குறுகிய சந்துச் சாலைகள் வெறும் 10 முதல் 12 அடி அகலம் மட்டுமே கொண்டவை என்றும், இந்தப் பகுதிகளுக்குள் அதிக அளவில் வாகனங்கள் நுழைந்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் சிடிஐ தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஒரு லாரி சாலையில் சிக்கிக்கொண்டால் கூட பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி ஜந்தா் மந்தரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியையும் சிடிஐ சுட்டிக்காட்டியுள்ளது. அப்போது சுமாா் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் போ் மட்டுமே பங்கேற்றிருந்தபோதிலும், மத்திய தில்லியின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், இதனால் வா்த்தகா்களுக்கு ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் பேரணியால் பழைய டெல்லியின் வா்த்தக நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கும் சூழல் ஏற்படலாம் என்றும், இதனால் ரூ.10 ஆயிரம் கோடி வரை வா்த்தக இழப்பு ஏற்படக்கூடும். எனவே, பேரணியை நவம்பா் 10-ஆம் தேதிக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என்பதே தங்களது முதன்மையான கோரிக்கை. ஒருவேளை பேரணியை ஒத்திவைக்க முடியாத நிலை ஏற்பட்டால், வா்த்தகப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் புராரி மைதானம் அல்லது ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு பேரணியை மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.