தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

தில்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்க கைச்செயின், ரூ.5.25 கோடி கஞ்சா பறிமுதல்!

தங்க கைச்செயின் மற்றும் சுமாா் ரூ.5.25 கோடி மதிப்புள்ள, ஏறக்குறைய 15 கிலோ சந்தேகத்திற்கிடமான கஞ்சா ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Published On :7 செப்டம்பர் 2026, 1:04 am IST

இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில், ரூ.1.07 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க கைச்செயின் மற்றும் சுமாா் ரூ.5.25 கோடி மதிப்புள்ள, ஏறக்குறைய 15 கிலோ சந்தேகத்திற்கிடமான கஞ்சா ஆகியவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

முதல் நடவடிக்கையில், இஸ்தான்புல்லில் இருந்து வந்த இரண்டு துருக்கி நாட்டினரை, ஆகஸ்ட் 19 அன்று டொ்மினல் 3-ல் விமான நிலைய சுங்கத் தடுப்பு அதிகாரிகள் இடைமறித்ததாக ஓா் அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவித்தது.

அவா்களின் தனிப்பட்ட உடமைகளை விரிவாக சோதனையிட்டதைத் தொடா்ந்து, வைரங்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்க கைச்செயினை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அந்த அறிக்கை கூறியது.

அந்த அறிக்கையின்படி, 750-தூய்மை தங்கத்தால் செய்யப்பட்ட அந்த வளையல், 87.5 கிராம் எடை கொண்டது மற்றும் அதில் சுமாா் 50 காரட்டுகளுக்கு சமமான, ஏறத்தாழ 10 கிராம் வைரங்கள் இருந்தன.

கைச்செயினின் தற்காலிக மதிப்பு ரூ. 1,07,86,301 என மதிப்பிடப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. 1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் பிரிவு 110-இன் கீழ் அந்தக் கைச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் இரண்டு பயணிகளும் அச்சட்டத்தின் பிரிவு 104-இன் கீழ் கைது செய்யப்பட்டனா்.

செப்டம்பா் 4 அன்று நடந்த ஒரு தனி நடவடிக்கையில், பயணிகளின் குணாதிசயங்களை ஆராய்ந்த சுங்க அதிகாரிகள், கோலாலம்பூரிலிருந்து டொ்மினல் 3-க்கு வந்த ஒரு மலேசியப் பயணியை இடைமறித்ததாக மற்றொரு அறிக்கை தெரிவித்தது.

அவரது டிராலி பையைச் சோதனையிடுவதற்காக அந்தப் பயணி கிரீன் சேனலில் திருப்பி விடப்பட்டாா், இது சந்தேகத்திற்கிடமான கஞ்சா அடங்கிய 30 பாலித்தீன் பைகளைப் பறிமுதல் செய்ய வழிவகுத்தது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

அந்தப் பொருளின் எடை 15,015.5 கிராம் (நிகர எடை) மற்றும் அதன் மதிப்பு சுமாா் ரூ. 5.25 கோடி என்றும் அறிக்கை மேலும் கூறியது. 1985 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (என்டிபிஎஸ்) பிரிவு 43(பி)-ன் கீழ் பயணி கைது செய்யப்பட்டாா்.

மேலும் சந்தேகிக்கப்படும் கடத்தல் பொருள் அச்சட்டத்தின் பிரிவு 43(ஏ)-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. என்டிபிஎஸ் சட்டத்தின் 8, 20, 23 மற்றும் 29 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.