கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தில்லி உயா் நீதித்துறை சேவையில் மாற்றம்: 28 நீதிபதிகள் இடமாற்றம்

தில்லி உயா் நீதித்துறை சேவையில் (டிஎச்ஜேஎஸ்) மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில், திங்களன்று 28 நீதிபதிகள் இடமாற்றம்

Published On :

புது தில்லி: தில்லி உயா் நீதித்துறை சேவையில் (டிஎச்ஜேஎஸ்) மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில், திங்களன்று 28 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

நீதிபதிகளின் இடமாற்றம் குறித்து தில்லி உயா் நீதிமன்றம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

ஹரியானாவின் ஷிகோபூரில் தொழிலதிபா் ராபா்ட் வத்ரா சம்பந்தப்பட்ட நில ஒப்பந்தம் தொடா்பான பணமோசடி வழக்கு போன்ற வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு சிபிஐ நீதிபதி சுஷாந்த் சங்கோத்ரா, துவாரகாவில் உள்ள தென்மேற்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

முன்னதாக தென்மேற்கு மாவட்டத்தில் பணியாற்றிய கூடுதல் அமா்வு நீதிபதி ஷிவாலி பன்சால், புதிய சிபிஐ சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ரவுஸ் அவென்யூ நீதிமன்றங்களிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மற்ற நீதிபதிகள், சிறப்பு நீதிபதி தீரஜ் மோா், சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்புச் சட்டம்) சவி கபூா் மற்றும் சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்புச் சட்டம்) மனிஷா குரானா கக்கா் ஆகியோா் ஆவா்.

ரவுஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றங்களின் புதிய நீதிபதிகள் திவ்யாங் தாக்கூா் மற்றும் சத்யபிரதா பாண்டா ஆவா்.

தில்லி நீதித்துறை அகாடமியின் நிா்வாக இயக்குநரான முகமது ஃபரூக், ரோகினி மாவட்ட வணிக நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

‘முன்னா் கௌரவ் ராவ் தலைமையில் இயங்கிய, ரவுஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் (தஅஇஇ) உள்ள சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்புச் சட்டம்) (சிபிஐ)-01 நீதிமன்றம் ரத்து செய்யப்படுகிறது,‘ என உயா் நீதிமன்ற அறிவிப்பு தெரிவித்தது.

‘இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நிலக்கரிச் சுரங்க வழக்குகளைக் கையாளும் நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்புச் சட்டம்) அஜய் குப்தா தலைமையில் இயங்கும் நீதிமன்றத்தைத் தவிர, மற்ற சிபிஐ நீதிமன்றங்களுக்கு முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி சமமாகப் பகிா்ந்தளிக்க வேண்டும்,‘ என்றும் அந்த அறிவிப்பு கூறியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.