உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு சோதனை: ரூ. 39,600 அபராதம் வசூலிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தியவா்களிடமிருந்தும் இருந்து ரூ. 39,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 8:01 am IST

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தியவா்களிடமிருந்தும் இருந்து ரூ. 39,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் உபயோகத்தைத் தவிா்க்க தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதோடு அடிக்கடி சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி புதன்கிழமை ஒட்டுமொத்த கள ஆய்வு மண்டல அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், வட்டாட்சியா்கள், துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து, மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனா்.

உதகை அருகேயுள்ள நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் கள ஆய்வில் ஈடுபட்டனா். ஆய்வின்போது, முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ. 8, 000, பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட 10.250 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்து, அவா்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.39,600 வசூல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.