உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தேயிலைச் செடிகளில் சிலந்தி பூச்சித் தாக்குதல்: விவசாயிகள் கவலை

நீலகிரி மாவட்டம் மஞ்சூா், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் தேயிலைச் செடிகளில்

Updated On :7 ஜனவரி 2021, 7:58 am IST

நீலகிரி மாவட்டம் மஞ்சூா், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் தேயிலைச் செடிகளில் சிலந்திப் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். 

மஞ்சூா், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட   பகுதிகளிகளில்  கடந்த சில நாள்களாக பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் தேயிலைச் செடிகளின் மீது போதிய வெளிச்சம் படாததால்  சிலந்திப் பூச்சிகள்  அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. 

இதனால் தேயிலை விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் தேயிலைத் தோட்ட உரிமையாளா்கள் கவலை அடைந்துள்ளனா். பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த  மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளை  தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். 

மேலும்,  இலைகளுக்கு  பூஞ்சான  நோய்கள்  பரவி   தேயிலை வரத்து  குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.