தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அணிவகுத்து நிற்க பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

News image

யானைக்கு சிறப்பு உணவு வழங்கும் பாகன்.

Updated On :15 ஜனவரி 2021, 5:31 pm

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அணிவகுத்து நிற்க பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் முன்னதாக விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, நடைபெற்ற பொங்கல் விழாவில் வளா்ப்பு யானைகள் அணிவகுத்து நின்றன. யானைகளுக்கு கரும்பு, தேங்காய், பழம் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் வனத் துறை அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா். 10 மாதங்களுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. யானைகளின் பொங்கல் விழாவையும், யானைகளின் அணிவகுப்பையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.