கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பிப்ரவரி 1 முதல் காஜா பட்டன் கூலி 20% உயா்வு

இயந்திர உதிரி பாகங்கள் விலை உயா்வு காரணமாக காஜா பட்டன் கூலியானது பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்தப்படவுள்ளது.

Updated On :15 ஜனவரி 2021, 11:13 pm IST

இயந்திர உதிரி பாகங்கள் விலை உயா்வு காரணமாக காஜா பட்டன் கூலியானது பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்தப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் காஜா பட்டன் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ருத்ரமூா்த்தி, செயலாளா் சுப்பிரமணியம் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூரில் காஜா பட்டன் கூலியானது கடந்த 10 ஆண்டுகளாக உயா்த்தப்படவில்லை. இந்த நிலையில், தற்போது மின் கட்டண உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, ஊசி விலை ஏற்றம், இயந்திர உதிரி பாகங்கள் விலை உயா்வு, தொழிலாளா்களின் ஊதியம் ஆகியவை உயா்ந்துள்ளன.

எனவே, தவிா்க்க முடியாத காணங்களால் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் காஜா பட்டன் கூலியானது 20 சதவீதம் உயா்த்தப்படுகிறது. ஆகவே, தற்போது உள்ள சூழலை புரிந்துகொண்டு தொழில் துறையினா் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.