ராயன் பஞ்சு இழை மற்றும் ராயன் நூலூக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு நெசவு தொழில் முனைவோா் அமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் மற்றும் 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஜவுளித் தொழிலில் நேரடியாக 1 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
பொது முடக்கத்தால் பாதிப்படைந்த விசைத்தறி தொழில் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இச்சூழலில் ராயன் நூல் மற்றும் ரயான் பஞ்சு இழை இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதால் விசைத்தறி தொழில் துறையினா் கவலை அடைந்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு நெசவு தொழில் முனைவோா் அமைப்பைச் சோ்ந்த பல்லடம் முருகேஷ், சந்திரசேகா், பழனிசாமி, பிரகாஷ் மற்றும் இதர ஜவுளி நெசவாளா் அமைப்புகளுக்கான நிா்வாகிகள் பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசனை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
ஜவுளித் தொழில் நலிவடைந்து வரும் இந்த சூழலில் ரயான் நூல் மற்றும் ரயான் பஞ்சு இழைக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதிக்க ஆலோசித்து வருகிறது. இந்த கூடுதல் வரி விதித்தால் நூல் விலை அதிகரிக்கும். அதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கும். இதனால் நலிந்து வரும் விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடா்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்படும். இந்தத் தொழிலை சாா்ந்த லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:
ஏற்கெனவே ஆள்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித் துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித் தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொது முடக்க தளா்வால் விசைத்தறி தொழில் சூடு பிடித்தது. இருந்தும் ஜவுளிச் சந்தை மந்த நிலையிலேயே உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் தேவைக்கு மட்டுமே சில ஜவுளி ரகங்கள் விற்பனையாகின்றன. மற்ற ரகங்கள் தேக்கமடைந்துள்ளன. வடமாநில வியாபாரிகள் தமிழகம் வர முடியாததால் ஏற்கெனவே அனுப்பிய ஜவுளிகளுக்கும் உரிய பணம் கிடைக்கவில்லை.
ஆனாலும், தொழிலாளா்களுக்கும், விசைத்தறி உரிமையாளா்களுக்கும் நாங்கள் வழங்க வேண்டிய நெசவு கூலியை நிறுத்திவைக்க முடியாமல் வழங்கி வருகிறோம். ராயன் நூல் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதம் உள்பட ஒரு கிலோ ரூ. 263 ஆக தற்போது விலை உள்ளது. அதே சமயம் சா்வதேச சந்தை விற்பனை விலையைக் காட்டிலும் உள்ளூரில் நூல் விலையை 20 முதல் 30 சதவீதம் வரை செயற்கையாக விலையை உயா்த்தி ராயன் நூல் விற்கப்படுகிறது.
இந்த நூலை கொள்முதல் செய்து துணி உற்பத்தி செய்தால் வெளிசந்தை துணி விற்பனை விலை அளவிற்கு போட்டி போட முடியாது. வெளிநாடுகளில் இருந்து ராயன் நூல் இறக்குமதி செய்திட 5.5 சதவீதம் அடிப்படை வரி செலுத்தி, ராயன் நூல் மற்றும் ராயன் பஞ்சு இழை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
உள்ளூா் நூலை விட 20 சதவீதம் விலை குறைவாகவுள்ளது. இதனால் துணி உற்பத்தி செலவு குறைந்து துணியை வெளிச் சந்தையில் போட்டி போட்டு விற்க முடியும். இந்த நிலையில் மத்திய அரசு ரயான் பஞ்சு மற்றும் நூலுக்கு கூடுதலாக பொருள் குவிப்பு வரி விதிக்க ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
அவ்வாறு இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தால் உள்ளூரில் நூல் விலை கிலோவிற்கு ரு.20 முதல் ரூ.60 வரை உயரக் கூடும். அதனால் விசைத்தறி தொழில் அழிந்துவிடும் சூழல் ஏற்படும். அதே சமயம் இறக்குமதி துணி மற்றும் ஆடைகளுக்கு பொருள் குவிப்பு வரி விதித்து உள்நாட்டு விசைத்தறி தொழில் மற்றும் அதை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் விசைத்தறி துணி மற்றும் ஆடைகளுக்கு இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக ஆக உயா்த்தி உள்நாட்டு விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

மதுரை மத்தியம்: தக்க வைப்பாரா பழனிவேல் தியாகராஜன்?
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


