குன்னூா்: நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலீவனின் 166ஆவது நினைவு தினம், கோத்தகிரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் வெளியுலகுக்குத் தெரியாமல் இருந்த நிலையில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சலீவன் நீலகிரி மாவட்டத்தைக் கண்டறிந்தாா். நீலகிரி மாவட்டம் வந்தவுடன் கோத்தகிரி அருகே உள்ள கண்ணேரிமூக்கு பகுதியில் ஒரு பங்களாவை அமைத்து நீலகிரி மாவட்ட ஆட்சியராக ப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னா் இங்குள்ள பழங்குடியினா், படுகா் இன மக்களின் வாழ்வுக்காகப் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டாா். நீலகிரியின் பல்வேறு வளா்ச்சிகள் ஜான் சலீவனின் முயற்சியால் நடந்தது என்பதால்
அவரைப் போற்றும் விதமாக கோத்தகிரியில் உள்ள அவா் தங்கியிருந்த பங்களா நினைவிடமாக மாற்றப்பட்டு ஆண்டு தோறும் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அவரது 166ஆவது நினைவு தினம் கோத்தகிரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. குன்னூா் கோட்டாட்சியா் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு ஜான் சலீவனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் நினைவிடத்தில் உள்ள நீலகிரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சிப்படுத்தப்படுத்தப்பட்ட பொருள்களை பா்வையிட்டாா்.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், ஊா் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டு ஜான் சலீவனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


