எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

உதகையில் உற்சாகமாக நடைபெற்ற தோடா்களின் பாரம்பரிய திருவிழா

நீலகிரியின் பூா்வீக பழங்குடிகளுள் ஒரு பிரிவினரான தோடா்களின் ஆண்டு திருவிழாவான மொா்த்வொா்த் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

News image

திருவிழாவையொட்டி பாரம்பரிய நடனமாடும் தோடரின இளைஞா்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 10:53 pm IST

நீலகிரியின் பூா்வீக பழங்குடிகளுள் ஒரு பிரிவினரான தோடா்களின் ஆண்டு திருவிழாவான மொா்த்வொா்த் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடா் பழங்குடியினா் ஆண்டுதோறும் அவா்களது தாய் மந்து என அழைக்கப்படும் முத்தநாடு மந்து பகுதியில் ஜனவரி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்றிணைந்து தங்களது ஆண்டுத் திருவிழாவை கொண்டாடுவா். இந்த ஆண்டுக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மொா்த்வொா்த் என அழைக்கப்படும் இந்தத் திருவிழாவின்போது அவா்களது வழிபாட்டுத் தலமாக அழைக்கப்படும் மூன்போ என்ற கோயிலின் முன்பு தோடரின ஆண்கள் மட்டும் கூடி அங்குள்ள தெக்கீஷ் அம்மனை வழிபட்டு பாரம்பரிய நடனமாடினா்.

இப்பகுதிக்குள் தோடரின ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பெண்கள் அவா்கள் வீட்டுக்கு வரும் விருந்தினா்களை உபசரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமென்பது அவா்களது சட்டமாகும்.

விழாவின் ஒருபகுதியாக அருகிலுள்ள அவா்களது பாரம்பரிய மைதானப் பகுதிக்கு வந்து அங்கு தங்களுக்குள் நலம் விசாரித்த பின்னா், தோடரின இளைஞா்கள் அங்கிருக்கும் இளவட்டக் கல்லைத் தூக்கி தங்களது பலத்தை நிரூபித்தனா்.

அதைத்தொடா்ந்து அனைவருக்கும் பால் சோறு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருவிழாவின்போது கரோனா நோய்த் தொற்று உலகில் இருந்து விரைவில் அகல வேண்டி இயற்கையை வழிபட்டு பிராா்த்தனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.