Enable Javscript for better performance
நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வித் ராதிகா ராமசாமி (இந்தியாவின் முதல் பெண் கானுயிர் புகைப்படக் கலை வல்லுநர- Dinamani

சுடச்சுட

  

  நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வித் ராதிகா ராமசாமி (இந்தியாவின் முதல் பெண் கானுயிர் புகைப்படக் கலை வல்லுநர்)

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 10th October 2019 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nocompromise_promo

  புகைப்படக் கலை என்றாலே இன்றும் கூட திருமண புகைப்படங்கள் எடுப்பதையும், மாடலிங்குக்குத் தேவையான ஃபேஷன் ஃபோட்டோகிராபி எடுப்பதையுமே பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அதை விட்டால் திரைப்படங்களுக்கான ஸ்டில் ஃபோட்டோகிராபி நினைவுக்கு வரலாம். கானுயிர் புகைப்படக் கலை என்பது மிகவும் அரிதாகத்தான் ஒரு சிலரது கவனத்தை ஈர்க்கிறது.

  உலக அளவில் இத்துறைக்கு மிகப்பெரிய மரியாதையும், அங்கீகாரமும் இருந்த போதும் இத்துறையில் சாதிக்கத் தேவையான காத்திருப்பு, சகிப்புத் தன்மை, சலிப்பற்ற ஆர்வம் உள்ளிட்ட பல விஷயங்களை முன்னிட்டு பலரும் வெறும் ரசனையோடு இதைக் கடந்து போய் விடுவதுண்டு.

  அதைத்தாண்டி வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராபியை தொழில்முறையாகக் கைக்கொள்ள வேண்டுமெனில் கேமராக்களுக்காகவும் உரிய லென்ஸ்களுக்காகவும் காஸ்ட்லியான தொகையைச் செலவிட வேண்டியதாக இருக்கும். இதற்குத் தயங்கியும் பலருக்கு இத்துறை எட்டாக்கனியாகி எட்டி நிற்கிறது. 

  இந்நிலையில் தமிழகத்தின் தெற்கத்தி கிராமமொன்றில் பிறந்து வளர்ந்து முற்றிலும் கிராமத்தின் அரசுப் பள்ளிகளிலேயே பள்ளிப்படிப்பை முடித்ததோடு கணினித்துறையில் பொறியியல் பட்டம் பெற்று எம் பிஏ படிப்பையும் முடித்து விட்டு அது தொடர்பான பணிகளில் பல காலம் பணிபுரிந்து விட்டு 10 ஆண்டுகளுக்கு முன்பாக தனக்கு இனி பொறியியல் துறை எல்லாம் வேண்டாம், இதுவரை அதில் சாதித்தது போதும் இனி இளமையில் தன்னை ஈர்த்த புகைப்படத் துறையில் சாதிக்கலாம் என துணிந்து இந்தத்துறையில் இறங்கி தற்போது இந்தியாவின் முதல் பெண் கானுயிர் புகைப்பட வல்லுநராக சாதித்து வரும் ராதிகா ராமசாமியின் திறமையை எண்ணும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

   

  அவருடனான நேர்காணலில் புகைப்படத்துறை மீது அவருக்கு ஈடுபாடு ஏற்பட்ட ஆரம்ப காலங்கள் தொட்டு பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். கை நிறைய வருமானம் ஈட்டித்தந்த பொறியியல் துறை வேலையை உதறி விட்டு கற்ற கல்வியை வீணாக்காமல் அதை அப்படியே தனது கானுயிர் புகைப்படங்களுக்கான விளம்பரம் மற்றும் சர்வ தேச விற்பனை அது தொடர்பான தொழில்முறை பயிலரங்கங்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தி வரும் அவரது புத்திசாலித்தனமும் நேர்த்தியும் அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்கள்.

  இந்தியக்காடுகளைப் பற்றியும், ஒரு அருமையான ஷாட்டுக்காக மணிக்கணக்காக காத்திருக்கையில் தனக்கு வனங்களில் நேர்ந்த சுவாரஸ்யமான அனுபவங்களையும் , அபூர்வமான தருணங்களையும் அவர் பகிர்ந்து கொண்டது இத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் அனைவருக்குமான பாடங்கள்.

  நேர்காணலின் இறுதியில் அவர் முன் வைத்த ஒரே கோரிக்கை. தயவு செய்து பிளாஸ்டிக் உபயோகத்தை புறக்கணித்து விட்டு அதற்கான மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள் என்பதே. ஏனெனில், சுற்றுச்சூழல் மற்றும் விலங்களுக்கான சமநிலையை நிலைநிறுத்த அது ஒன்றே உரிய மார்க்கம் என்பதால்.

  இது நேர்காணலுக்கான முன்னோட்டம்...

  முழு நேர்காணல் இன்று மாலை வெளியாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai