நந்திவர்மன் - கோவி.மணிசேகரன்; பக்.752; ரூ.375; பூம்புகார் பதிப்பகம், சென்னை.
)044-25267543
தமிழ் நந்தி என்ற புகழுக்குரிய பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்ம போத்தரையன் கதை நாயகன். குணத்தால் இரு துருவங்களான ராஷ்டிரக் கூடத்து இளவரசி சங்கா தேவியும், பாண்டிய இளவரசி மாறம்பாவையும் ராஜநாயகிகள். தாயை விடவும் தமிழை நேசிக்கும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ள நந்திவர்மன், நந்தி கலம்பகம் ஓலைச் சுவடி தன் கண் முன்பே எரிக்கப்படுவதைக் காணச் சகிக்காது யார் தடுத்தும் கேளாது தீக்குளித்து உயிர் துறக்கிறான். பல்லவ மன்னனின் உள்ளம் கவர்ந்த பெண் புலவரான பூங்குழலியை ஆண்டாளின் மறு உருவம் என்கிறார் மணிசேகரன். நந்தி கலம்பகத்தைப் பாடியது ஒரு பெண்ணே (அண்ணனைக் கொல்ல தம்பி அறம் பாடியது இக்கலம்பகம் என்ற கருத்தும் உள்ளது) என்பது அவரது தரப்பு வாதம். தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளை நாவலில் பொருத்தமான இடத்தில் இடம்பெறச் செய்திருப்பது சிறப்பு. சரித்திர புதினங்களுக்கே உரிய காதல், சரசம், குரோதம், வீரம் கொப்பளிக்கும் வசனங்களுடன் விறுவிறுப்பாக
நகர்கிறது கதை. ஓவியர் மணியம் செல்வனின் முகப்பு ஓவியம் உயிரோவியமாய் மிளிர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









