தமிழக மின்சாரத் துறையின் வரலாறு

தமிழக மின்சாரத் துறையின் வரலாறு - தி.ராமகிருஷ்ணன் - இரா.தங்கத்துரை; பக்.136; ரூ.75; ஜெனிசஸ் நல்வாழ்வு அறக்கட்டளை, சென்னை-7; )9381020748. தமிழகத்தில் மின்சார வெட்டு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நில
Updated on
1 min read

தமிழக மின்சாரத் துறையின் வரலாறு - தி.ராமகிருஷ்ணன் - இரா.தங்கத்துரை; பக்.136; ரூ.75; ஜெனிசஸ் நல்வாழ்வு அறக்கட்டளை, சென்னை-7; )9381020748.

தமிழகத்தில் மின்சார வெட்டு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை ஆராயும் வகையில் உருவாக்கியிருக்கின்றனர் இந்நூலாசிரியர்கள். 18 ஆண்டுகளுக்கு முன்பு மின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கலாம் என மத்திய அரசு முடிவு எடுத்தபோது, இனி மின் உற்பத்தியில் அரசு ஈடுபட வேண்டியிருக்காது என்று ஏற்பட்ட எண்ணமே இப்போதைய மின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்கின்றனர். தமிழகத்தில் 1900-ம் ஆண்டு நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் அமைத்த புனல்மின் நிலையமே முதலாவது மின் உற்பத்தி நிலையம் என்பதில் தொடங்கி, இன்று வரை தமிழகத்தில் தொடங்கி செயல்பாட்டில் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் பற்றிய குறிப்புகள் வரை உள்ளன. தமிழக அரசால் திட்டமிடப்பட்டு, நிறைவேற்றப்படாத சில திட்டங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றியிருந்தால் மின் உபரி மாநிலமாகத் தமிழகம் மாறியிருக்கும் என்றும் கூறியுள்ளனர். அறிவிப்போடு நின்றுபோன திட்டங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இலவச மின்சாரத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சார மோட்டார் வழங்கும் திட்டம், மின்வாரிய நிதி நிலைமை, வீடுகளுக்கான மின் கட்டணத்துக்கு அரசு மானிய உதவி அளிப்பது, மின் துறையைப் பிரித்தல் முதலிய தகவல்களும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com