காளியம்மன் ஆலயங்கள்
காளியம்மன் ஆலயங்கள் - வைரஜாதன்; பக்.104; ரூ.45; விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-32; )044-45540005. சக்தி வழிபாடு தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அசுரர்களின் ஆணவ


காளியம்மன் ஆலயங்கள் - வைரஜாதன்; பக்.104; ரூ.45; விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-32; )044-45540005.
சக்தி வழிபாடு தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அசுரர்களின் ஆணவத்தை அழித்து தர்மத்தைக் காக்கும் பொருட்டு அவள் "காளி' என்ற பெயருடன் - அச்சம் தரும் தோற்றத்துடன் தோன்றுகிறாள். காளி அருள் பெற்றுக் கவிபாடிய கவிஞர்கள் நிறையபேர் உள்ளனர். மன்னர்களுள் பலரும் போருக்குச் செல்லும் முன் காளி தேவியை வணங்கிவிட்டுத்தான் சென்று, பகை முடித்து, வெற்றி வாகை சூடியதாக மன்னர்கள் வரலாறு கூறுகிறது. வெற்றி தரும் சக்தியான காளி தேவி கோயில் கொண்டுள்ள சிறுவாச்சூர், அரியாக்குறிச்சி, கொரநாட்டுக் கருப்பூர், திருமலைராயன் பட்டினம், அம்பகரத்தூர் எனக் காளி கோயில்கள் ஐந்தின் சிறப்புகளும், அந்தந்தக் கோயில்களுக்குச் செல்வதற்கான பயணக் குறிப்புகளும் படங்களும் தந்திருப்பது காளி பக்தர்களுக்குக் கட்டாயம் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...