சாண்டில்யன் எழுதுகிறேன் - தெ.இலக்குவன்; பக்.248; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை- 17; )044-2431 0769.
சரித்திர நாவலாசிரியராகப் புகழ் பெற்ற சாண்டில்யனின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதப்பட்டிருக்கும் நூல் இது.
சாண்டில்யனின் 35 சரித்திர நாவல்களில் முப்பத்து நான்கும், சரித்திர சிறுகதைத் தொகுப்பு இரண்டும், சமூக நாவல்கள் நான்கும் இதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு குறை, ஆய்வின் பெரும் பகுதி கதையை விவரிப்பதிலேயே போய்விடுகிறது. குறிப்பாக "பாண்டியன் பவனி' என்ற நாவலைப் பற்றிய அத்தியாயம் முழுவதும் கதையை விவரித்துவிட்டு கடைசியாக ஒரே ஒரு வரியில் வேறு எழுதுவதற்கு எதுவுமில்லாத நாவல் என்ற குறிப்படுகிறார் நூலாசிரியர்.
சாண்டில்யன் தன்னுடைய நாவல்களின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனியாக பொருத்தமான தலைப்புகளை வைத்திருப்பதைப் பாராட்டும் நூலாசிரியர், நாவலின் நீளத்துக்காகத் தேவையில்லாமல் பல அத்தியாயங்கள் வருவதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. உதாரணமாக "கடல் புறா' நாவலில் ஓர் இடத்தில் குணவர்மன் தன் கதையைக் கூறுவதாக ஆரம்பிக்கிறான். ஆனால் நான்கு பக்கங்கள் கழித்துதான் கதை ஆரம்பிக்கிறது.
தேவையில்லாமல் பல அத்தியாயங்கள், சலிப்பூட்டக்கூடிய நீண்ட வர்ணனைகள், எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுவது போன்றவற்றால் கதை பல இடங்களில் நீர்த்துப் போய்விடுகிறது என்பதையும் தன்னுடைய ஆய்வுகளின் இறுதியில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
சாண்டில்யனின் அத்தனை படைப்புகளையும் ஒரே சமயத்தில் படித்து முடித்த திருப்தியைத் தரும் நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி: ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கனடாவை எதிர்கொள்ளும் மொராக்கோ: பிரேசிலுக்கு யார்?
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


