தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சங்க மரபு

சங்க மரபு - தமிழண்ணல்; பக்.396; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை}1;)2345971.

Updated On :10 பிப்ரவரி 2013, 6:28 pm

சங்க மரபு - தமிழண்ணல்; பக்.396; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை}1;)2345971.

1969-இல் முனைவர் பட்டத்திற்காக தமிழண்ணல் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வேடு, பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியனால் தமிழாக்கம் செய்யப்பட்டு நாற்பதாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது.

சங்க மரபு (முன்னுரை), மாண்பார் சங்க மரபு, தொல்காப்பியமும் சங்கச் செய்யுள் மரபுகளும், சங்கப் பனுவல்களில் இலக்கிய மரபுகள், திணைச் செய்யுளின் தோற்றமும் வளர்ச்சியும், மரபுவழி உணர்வும் தனித் திறனும் ஆகிய இயல்களுடன், பின்னிணைப்பில் திணை துறை கூற்று நிரல் பகுதியில், அகத்திணை, புறத்திணைக்குரிய தொகை நூல்களில் காணப்படும் திணைப்பாடல்களின் தொகை அட்டவணையையும் இணைத்துள்ளது நூலாசிரியரின் கடின உழைப்பையும், இலக்கிய ஆர்வத்தையும், மொழிபெயர்ப்பாளரின் இருமொழிப் புலமையையும் வெளிப்படுத்துகிறது.

"சங்கச் செவ்வியல் இலக்கியக் கல்விக்கு இவ்வாய்வு ஒரு நல்ல நுழைவாயிலாகும்' என்ற தமிழண்ணலின் வாக்கை வழிமொழிந்தே ஆகவேண்டும். சங்க இலக்கிய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த நூல் ஒன்றே போதுமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.