அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாம்பின் கண்: தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

பாம்பின் கண்: தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - சு.தியடோர் பாஸ்கரன்; தமிழில்: லதானந்த்; பக்.280; ரூ.190; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044 - 4200 9603.

News image
Updated On :23 ஜூன் 2013, 5:58 pm

சி.வ.சு.ஜெக​ஜோதி​

பாம்பின் கண்: தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - சு.தியடோர் பாஸ்கரன்; தமிழில்: லதானந்த்; பக்.280; ரூ.190; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044 - 4200 9603.

திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூலுக்கான இந்திய அரசின் விருது பெற்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். 1897 ஆம் ஆண்டு சென்னையில் (அப்போது மதராஸ்) "அரைவல் ஆஃப் தி டிரெயின்', "லீவிங் தி ஃபேக்டரி' ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டதில் தொடங்கி சாமிக்கண்ணு வின்சென்ட், ஆர்.வெங்கையா, ஆர்.நடராஜமுதலியார், பிரகாசா, ஏ.நாராயணன் போன்றோருடைய சினிமா ஈடுபாடுகளும் தமிழ் சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம், பாடல்களின் பங்களிப்பு போன்றவை தனித்தனி அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. சில வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் பற்றியும் அரிய தகவல்கள் உள்ளன. சில முக்கியமான படங்களின் கதைச் சுருக்கமும் அப்படங்களில் பணிபுரிந்த கலைஞர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 1987 இல் சென்னை விக்டோரியா அரங்கில் எம்.எட்வர்ட்ஸ் சில குறும்படங்களைக் காட்டியது முதல் 2011 இல் "ஆடுகளம்' படத்துக்காக வெற்றி மாறன் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றதுவரை தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. படங்களின் தலைப்புகளும் சொல்லடைவும் இணைக்கப்பட்டிருப்பது படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.