11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

விளம்பர உலகம்

விளம்பர உலகம் - எஸ்.எல்.வி. மூர்த்தி; பக்.160; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை - 2; )044-4263 4283.

Updated On :30 ஜூன் 2013, 6:54 pm

விளம்பர உலகம் - எஸ்.எல்.வி. மூர்த்தி; பக்.160; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை - 2; )044-4263 4283.

இக்காலத்தில் விளம்பரம் இன்றி ஓர் அணுவும் அசையாது. விளம்பரங்களைப் பற்றிய நிறைய தகவல்களோடு வெளிவந்திருக்கிறது இந்நூல்.

விளம்பரங்களின் தோற்றம், வளர்ச்சி, திட்டமிடுதல், வெளியிடுதல், ஓவியம், போட்டோகிராபி, நடிப்பு, புள்ளி விவரம், உலகை கலக்கிய விளம்பரங்கள், இந்திய சந்தையில் கொடிகட்டி பறந்த விளம்பரங்கள் என்று பக்கங்கள் நம் கண்முன்னால் படபடத்து பறக்கின்றன.

அமுல் விளம்பரத்தில் கொழு கொழு மொழு மொழு சுட்டிப் பெண், ஏர் இந்தியா மஹாராஜா, ஏஷியன் பெயிண்ட்ஸ் கட்டூ, சர்ஃப் பவுடர் லலிதாஜி, ஒனிடா பிசாசு என்று நமக்கு தெரிந்த விளம்பர அடையாளங்களின் தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

பல்வேறு ஊடகங்களின் மூலமாக, விளம்பர உலகம் எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

விளம்பர ஏஜென்சிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது? எந்தப் பொருளுக்கு எந்த நடிகரை மாடலாக நடிக்க வைப்பது? எந்த சீசனில் எந்த ஊடகத்தில் விளம்பரம் செய்யலாம்? என்று புத்தகம் முழுவதும் விளம்பரம் பற்றிய அனுபவ அறிவு, களஞ்சியமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. விளம்பரத்துறை பற்றித் தெரியாதவர்கள் கூட மிக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இப் புத்தகம் வெளிவந்திருப்பது இதன் தனிச் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.