அமெரிக்க அனுபவங்கள் ஒரு சமூகவியல் பார்வை - நாகேஸ்வரி அண்ணாமலை, பக்.210; ரூ. 165; அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, திருச்சி மாவட்டம்.
தகவல் தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் நாடாக விளங்கும் அமெரிக்காவைப் பற்றி பலவிதமான பயண நூல்கள், புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தையும்விட முற்றிலும் மாறுபட்டதாக வெளிவந்துள்ளது இந்நூல். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றபோது அமெரிக்காவைப் பார்த்தது, பின்னர் அங்கேயே தங்கியிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றைச் சமூகக் கண்ணோட்டத்தோடு எழுதியுள்ளார் நூலாசிரியர். அமெரிக்க கலாசாரம், அங்கே பாரமாகிவரும் முதியோர் சமூகம், பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய அரசியல் நிர்பந்தம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்துள்ளார். எளிமையான நடையில், விஷயங்கள் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள விரும்புவோர் பயண நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்வதைவிட இந்நூலைப் படித்தால் அதிகம் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









