முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு உணவகத்தில் தீ!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

சேரன் குலக்கொடி

சேரன் குலக்கொடி- கோவி. மணிசேகரன், பக். 572; ரூ.425; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; )044-2526 7543.

Updated On :23 செப்டம்பர் 2013, 12:36 am IST

சேரன் குலக்கொடி- கோவி. மணிசேகரன், பக். 572; ரூ.425; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; )044-2526 7543.

தமிழர் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம். இசையும், நாட்டியக் கலை நுணுக்கங்களும் இடம் பெற்றுள்ள இந்த நாவல், பண்டைய தமிழக வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகிறது. வானவன் வஞ்சி, மீனவன் மோகூர் ஆகிய இரு காண்டங்களைக் கொண்டுள்ள இந்த படைப்பு 1972-இல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல் என்பது சிறப்பு.

செங்குட்டுவனின் மனைவி வேள்மாளின் தங்கையான பொற்கொடியை வாசகர்கள் மனதில் நீங்காத உயிரோவியமாக்கி விட்டார் கோவி.மணிசேகரன். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் இந்த நாவலில் ஒரு பாத்திரமாகவே வருகிறார். இளங்கோவடிகள் - பொற்கொடி உரையாடல் நாவலில் உயிரோட்டமாய் அமைந்துள்ளது. மோகத்தில் திளைந்த மோகூர் அரசனான திருமாறன், ஏகபத்தினி விரதனாக இல்லாததால் தன்னைத் தீண்ட அனுமதிக்காத மனைவி பொற்கொடியின் அகால இறப்புக்குக் காரணமாகிறான். போரில் தோற்று மரணத்தின் கடைசி மூச்சில், "கற்பின் சிகரமே! காலமெல்லாம் நீ வாழ்க!' என்று திருமாறன் வாழ்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியை இரு பாத்திரங்களாக்கி உலவவிட்டுள்ளார் நூலாசிரியர். தங்கை மலர்க்குழலியை கலையரசியாகக் காட்டி, தமக்கையாகிய திருமேனியை தியாகத்தின் சுடராகப் படைத்துள்ளார். சிலப்பதிகாரத்தில் எப்படி ஊழ்வினை காரணமாக நிற்கின்றதோ, அப்படியே இந்தப் புதினத்திலும் ஊழ்வினை காரணமாக நிற்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.