முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி - கோவி.மணிசேகரன்; பக்.360; ரூ.275; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; )044- 2526 7543.

Updated On :17 மார்ச் 2014, 12:31 am IST

குற்றாலக் குறிஞ்சி - கோவி.மணிசேகரன்; பக்.360; ரூ.275; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; )044- 2526 7543.

1992 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது. தஞ்சையில் சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்த குறிஞ்சி என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்த பாடகியின் வாழ்க்கையை இந்நாவல் சித்திரிக்கிறது. சரபோஜி மன்னராகட்டும், அக்காலத்தில் இருந்த பல ஜமீன்தார்களாகட்டும், குறிஞ்சியின் இசையைவிட அவளுடைய அழகில் மயங்கி அவளை அடைய முயல்கின்றனர். பாடகி என்ற கர்வத்தோடும், பெருமையோடும் அவர்களின் முயற்சிகளுக்கெல்லாம் பணிய மறுக்கிறாள் குறிஞ்சி. அவளுடைய காதலன் சிறை வைக்கப்படுகிறான். அவன் விடுதலையாகப் போகிற நேரத்தில் சிவகங்கை இளைய ஜமீன்தார் இளைய வல்லபதேவ உடையாருக்கு குறிஞ்சி எழுதிய கடிதம் சுவைமிக்கது. "நானும் கொலைக்குற்றத்திலிருந்து விடுதலையாகப் போகிற என் காதலன் ஞானசுந்தரமும், நாங்கள் கண்டுபிடித்த, எங்களுக்கே சொந்தமான, அபூர்வ ராகமான குற்றாலக் குறிஞ்சியை இவர் முன் மனம் குளிரப் பாடுகிறோம். நாங்கள் பாடத் தவறினால், இந்த ராகம் மேற்சொன்ன ஜமீனுக்கு அடிமையாகிவிடுகிறது. இந்த ராகத்தை மீட்காமல் நான் வேறு எங்கும் அதைப் பாட மாட்டேன் என்று சத்தியம் செய்து அடகு வைக்கிறேன். நாங்கள் இருவரும் எப்போது வந்து பாடுகிறோமோ, அப்போது வந்து மீட்டுக் கொள்கிறோம்'- ராகத்தை அடகு வைக்கும் இவை போன்ற பல சுவைமிக்க சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன. வரலாற்று நாவல்களென்றால் அதன் நடை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வழக்கமான இலக்கணத்தை மீறாத நடையழகுடன் மிளிரும் நாவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.