திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்! ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மசோதா இன்று தாக்கல்!மாநிலங்களவை எம்.பி.க்களின் 2 ஆண்டு செலவினம் ரூ.262 கோடி: ஆா்டிஐயில் தகவல்!நாடாளுமன்றத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தை எழுப்ப திமுக திட்டம்அம்மா உணவகங்களில் அடிப்படை வசதிகள் கூடுதலாக்கப்படுமா?பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!
/

அகநானூறு - ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும்

அகநானூறு - ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும் - பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன்; பக்.374; ரூ.300; இராசகுணா பதிப்பகம், 28, முதல் தளம், 36ஆவது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர், புழுதிவாக்கம், ச

News image
Updated On :24 ஜூலை 2017, 1:05 am IST

அகநானூறு - ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும் - பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன்; பக்.374; ரூ.300; இராசகுணா பதிப்பகம், 28, முதல் தளம், 36ஆவது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர், புழுதிவாக்கம், சென்னை-91.
அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன. "கம்பர் விலாசம்' ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார்.
இவர், 91 முதல் 400 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஆனால், நமக்குக் கிடைப்பதோ 91 முதல் 160 பாடல்கள் மட்டுமே. இந்த உரைப்பகுதிகளும் நமக்குக் கிடைக்கக் காரணம், மு. இராகவையங்காரின் முயற்சியேயாகும். 1918இல் அகநானூற்றின் களிற்றி யானை நிரை என்ற பகுதியை மட்டும் முதற்பதிப்பாக வெளியிட்டுள்ளார். ஆனால் அந்தப் பதிப்பு கிடைக்கவில்லை. அடுத்து 1920இல் நூல் முழுவதையும் முன்னுரை முதலான எந்தவிதக் குறிப்புகளும் இல்லாமல் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பில் 90 பாடல்களுக்குப் பழைய உரையையும், 56 பாடல்களுக்குக் குறிப்புரையும் பதிப்பித்துள்ளார். 1923இல் நூல் முழுமைக்கும் முன்னுரை முதலான குறிப்புகளுடன் முதல் 90 பாடல்களுக்குப் பழைய உரை, 56 பாடல்களுக்குக் குறிப்புரை ஆகியவற்றையும் சேர்த்து பதிப்பித்துள்ளார்.
ராஜகோபாலார்யன் உரை, ராஜகோபாலார்யன் உரைநெறி, ராஜகோபாலார்யன் வாசிப்புக் கருத்தியல், பாடவேறுபாடுகள், குறிப்புரை முதலிய
நூற்பகுதிகளுடன், ராஜகோபாலார்யன் எழுதிய நூல்கள், வாழ்க்கைக் குறிப்பு, முதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பின் முகவுரை, அன்றைய தமிழ்ப் புலவர், புரவலர் பற்றிய விவரம் முதலான பதினாறு பின்னிணைப்புகளையும் கொண்டு, அகநானூறு பற்றிய முழுமையான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.