தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

ஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி; தமிழில்:  நாகலட்சுமி சண்முகம்;  பக்.494; ரூ.499;  மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2 ஆவது தளம், உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ்,  42, மால்வியா நகர

News image
Updated On :27 மே 2019, 12:40 am IST

ஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி; தமிழில்:  நாகலட்சுமி சண்முகம்;  பக்.494; ரூ.499;  மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2 ஆவது தளம், உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ்,  42, மால்வியா நகர், போபால்-462003.
வரலாறு என்பதே இதற்கு முன் நடந்தவற்றைப் பற்றிக் கூறுவதாகத்தான் இருக்க முடியும்.  இந்நூல் நூலின் தலைப்புக்கேற்ப, இனிமேல் நடக்கப் போகின்றவற்றைப் பற்றி பேசுகிறது.  உலகமயம், தாராளமயம் உள்ள இக்காலத்தில்,  உலகின் பழைய  கலாசாரம், மதம்,  சிந்தனை ஆகியவை அதற்கேற்ப மாற வேண்டியதன் தேவையை இந்நூல்  வலியுறுத்துகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அதனால் மாறி வருகிற வாழ்க்கைமுறை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றி வளர்ந்த சிந்தனைகளுக்குப் பொருத்தமாக இருக்க முடியாது என்று கூறுகிறது.    
அதற்கு உலகில் தற்போது நடப்பிலுள்ள பலவற்றை ஆராய்கிறது. 
"விவசாயிகள் கோதுமையை வளர்ப்பது, தொழிலாளர்கள் ஆடைகளைத் தயாரிப்பது, வாடிக்கையாளர்கள் ரொட்டிகளையும் மேலாடைகளையும் வாங்குவது ஆகியவற்றை உள்ளடக்கியதுதான்  பொருளாதாரம் என்று அப்பாவி மக்கள் நம்புகின்றனர்.  ஆனால் வல்லுநர்களோ,  விருப்பங்களையும் திறன்களையும் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்கும், அந்தத் தரவுகளைத் தீர்மானங்களாக மாற்றுவதற்குமான ஓர் இயக்க அமைப்பாக பொருளாதாரத்தைப் பார்க்கின்றனர்' என்று  தற்போதைய பொருளாதாரநிலையைப் பற்றிக் கூறும் நூலாசிரியர், "எனினும் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரேவிதமான சமுதாய அமைப்பையே உருவாக்கும் என்று கூற முடியாது' என்கிறார்.     மனித குலத்தின் எதிர்காலம் குறித்த சிந்தனைகளை இந்நூல் தூண்டிவிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.