தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

கண்டதைச் சொல்கிறேன் - வழக்கறிஞர் சுமதி; பக்.192; ரூ.200; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044-24896979.

வெகுஜன மாத இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தொழில் ரீதியாக தான் கண்டவற்றை  27 தலைப்புகளில் கதை சொல்வது போல சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். 

பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரியும் நிலையில், பிள்ளைகள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர்; குடிகாரக் கணவனால் பாதிக்கப்படும் பெண்களின் எதிர்காலம்; வயதான தாய்-தந்தையை  பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள்; தற்கொலை செய்து கொள்ள நினைப்போர்; தாய்-தந்தை பேச்சைக் கேட்டு கணவனை விட்டுப் பிரியும் பெண்களின் நிலைமை; கட்டாயத் திருமணம்; பிள்ளைகள் மீது அதீத நம்பிக்கை வைத்துவிட்டு பின் அது தவறு என வருந்தும் பெற்றோரின் மனநிலைமை - இப்படி  சமூகத்தில்  அரங்கேறி வரும் சில அவலங்களை, சகிக்க முடியாத விஷயங்களை,  பிரச்னைகளை முன்வைக்கிறது இந்நூல்.

பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகள் குறித்து  கூறுமிடத்து,  'நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை வைத்து உங்களைப் புரிந்து கொள்ளாத பிள்ளைகளுக்கு உங்கள் சொத்தை எழுதிக் கொடுத்தா உங்களை நிரூபித்துவிடப் போகிறீர்கள்' என்பது சரியான சாட்டையடி. 

திருமணம், கொலை, குற்றம், விவாகரத்து, துரோகம் போன்றவற்றை மையமாகக் கொண்ட இந்நூல் துக்கம், துயரம், கோபம், கொந்தளிப்பு, பரிதாபம், ஏமாற்றம், சமுதாய அக்கறை என அனைத்தையும்  வெளிப்படுத்துகிறது. மேலும், சமாதான வழக்குகள், ஆட்கொணர்வு மனு, திருமணச் சட்டம், வரதட்சிணைக் கொடுமை, குடும்ப நீதிமன்றம், மைனர் திருமணம், ஜீவனாம்சம் ஆகியவற்றுக்கான சட்டப் பிரிவுகளையும், விளக்கத்தையும் தந்திருப்பதைப் பாராட்டலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.