தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரொமிலா தாப்பர் - ஓர் எளிய அறிமுகம்

News image
Updated On :4 ஏப்ரல் 2022, 4:13 am

DIN

ரொமிலா தாப்பர் - ஓர் எளிய அறிமுகம் - மருதன், பக். 176,  ரூ. 200, கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014,  91- 44 - 42009603. 
நம் காலத்தின் மாபெரும்  வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரின் எழுத்துகளை அறிந்தவர்களுக்குக்கூட அவரைப் பற்றிய விவரங்களும் பின்புலமும் அவ்வளவாகத் தெரிந்திருப்பதில்லை என்ற குறையைத் தீர்க்கத் தமிழில் வந்திருக்கிறது இந்த நூல்.

வாழ்க்கை, வரலாறு, உரையாடல் என்ற மூன்று பெரும் தலைப்புகளில் எளிய, ஆனால் ஓரளவில் விரிவாகவே ரொமிலா தாப்பர் பற்றி விவரிக்கிறார் ஆசிரியர் மருதன்.

தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் ரொமிலாவின் பங்களிப்பை நினைவுகூர்வதுடன், சமூக அறிவியலாக வரலாறு வளர்த்தெடுக்கப்பட்ட விதம் பற்றியும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

1970-இல் ஜவாஹர்லால் பல்கலையில் இணைந்த ரொமிலா தாப்பர், ஏ.எல். பாஷம், டி.டி. கோசாம்பி போன்றோரின் வழித்தடத்தில் பாடத் திட்டத்தைக் கடந்து சாத்தியமாகக் கூடிய எல்லா திசைகளிலும் மாணவர்களின் விவாதங்களை வளர்த்தெடுத்துச் சென்றிருக்கிறார்.

ரொமிலா தாப்பர் மேற்கொண்ட முதல் அடிப்படை மாற்றம், காலங்காலமாக அது அடைபட்டுக் கிடந்த  பெட்டிக்குள்ளிருந்து இந்திய வரலாற்றை விடுவித்ததுதான் என்ற ஆசிரியரின் கூற்று மிகச் சரியே; அதை இந்த நூலும் மெய்ப்பிக்கிறது.

'நூலில், வரலாறு எழுதுவது எப்படி? என்ற இயல் ஆழமானது. மன்னர்கள் காலத்தில் நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுச் சாதனைகளை  மறுக்காவிட்டாலும் அந்தச் சாதனைகளை வியந்தோதுவது மட்டுமே வரலாற்றாசிரியனின் பணி அல்ல' என்கிறார் ரொமிலா.

உரையாடல் என்ற தலைப்பில் ரொமிலா தாப்பருடனான நூலாசிரியரின் நேர்காணல் சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக, வரலாற்றை  'கேள்விகளின்றி வரலாறு இல்லை. கேள்வி கேட்க ஒருபோதும் தயங்காதீர்கள்' - நூலாசிரியரிடம் கூறியதையே ரொமிலா தாப்பரின்  செய்தியாகவும் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.