தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேசமே உயிர்த்து எழு!

தேசமே உயிர்த்து எழு!- டாக்டர் க. கிருஷ்ணசாமி; பக்: 216;   ரூ. 250; கிழக்கு பதிப்பகம், சென்னை - 600 014;) 044 - 4200 9603.

News image
Updated On :10 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தேசமே உயிர்த்து எழு!- டாக்டர் க. கிருஷ்ணசாமி; பக்: 216;   ரூ. 250; கிழக்கு பதிப்பகம், சென்னை - 600 014;) 044 - 4200 9603.

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு என்று கண்டிக்கும் "இந்தியா ஒன்றியமா?' கட்டுரையில் தொடங்கி, "நேதாஜியின் மர்ம மரணம்', "சாதி ஒழிப்பு நாடகம்', "திராவிட பேரினவாதம்', "வன்னிய இட ஒதுக்கீடு', "மாறாத அமெரிக்கா', "புதிய கல்விக் கொள்கை', "எழுவர் விடுதலை', "காலத்துக்குப் பொருந்தாத சாதிப்பட்டியல்' உள்ளிட்ட 39 தலைப்புகளில் உள்ளாட்சி நிகழ்வுகளிலிருந்து உலக நாடுகளின் நடப்பு வரை சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.

1968-இல் கீழவெண்மணியில் தேவேந்திர குல வேளாளர்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைக்கப்பட்டு தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு, கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மண்ணுரிமையை, மனித உரிமையை, வாழ்வுரிமையை மீட்பதற்கான வரலாற்றுப் போராட்டத்தால் நிகழ்ந்த கொடுமை. அதனை சிலர் வெறும் கூலி உயர்வுப் போராட்டமாக சித்தரித்துவிட்டனர் என்கிறார் ("கீழவெண்மணியில் தேவேந்திரகுல வேளாளர்கள்!'). 

"சட்ட மேலவை வேண்டாம்', "சமூக வலை தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் வேண்டும்', "திரைத்துறை திருத்தச் சட்டம் 2021 கொண்டுவரப்பட்டது சரியே', "நீட் தேர்வை எதிர்ப்பது தவறு', "சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் அடுத்த ஆண்டுக்குள் நூறு மரங்களை நட வேண்டும்' எனப் பல்வேறு கருத்துகளை தரவுகளோடு முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.