தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேசியமும் திராவிடமும்

தேசியமும் திராவிடமும் - துரை கருணா; பக் - 200; ரூ. 300; எம்.ஜி.ஆர். பாசறை;சென்னை 17.

News image
Updated On :10 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தேசியமும் திராவிடமும் - துரை கருணா; பக் - 200; ரூ. 300; எம்.ஜி.ஆர். பாசறை;சென்னை 17.

தேசியமும் திராவிடமும் - என்ற இந்த நூலில் பெரும் பகுதி திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, ஆட்சி, அதிகாரம் குறித்து எழுதப்பட்டுள்ளது.

மொத்தமாக 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தேசியம் என்று வரும் போது, காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆரம்ப கால சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி, வாஞ்சிநாதன் வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடங்குகிறது. "வாஞ்சியின் தீவிரவாதச் செயலும் அவரது உயிரிழப்பும் தனக்கு உவப்பிலை' என்று வ.உ.சி.யின் அறிக்கையை எடுத்துக்காட்டி சுதந்திரப் போராட்டத்தின் இரு வித போக்குகளைப் பதிவிட்டுள்ளார் நூலாசிரியர் துரை கருணா.

காங்கிரஸ் பேரியக்கத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி பெரும்பாலான மாகாணங்களின் ஆட்சியில் இருந்த கட்சி, பின்னாளில் அடைந்த பின்னடைவும், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்கிற அமைப்பு நீதிக் கட்சியாக, திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக உருப்பெற்று இன்று வரை மாறி மாறி ஆட்சியில் இருப்பது எனப் பல்வேறு சுவையான சம்பவங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக - அதிமுக அமைப்புகளுடன் முரண்பட்ட காங்கிரஸ், அதே கட்சிகளுடன் வெவ்வேறு கால கட்டங்களில் கூட்டணி அமைத்ததும் கூட விவரிக்கப்பட்டிருக்கின்றன.

கம்யூனிஸ்ட் கட்சியில் இடது - வலது என உருவானது போன்று காங்கிரஸிலும் பிளவு ஏற்பட்டது குறித்த சம்பவங்களுடன் சொல்லப்பட்டுள்ளன.

சுவாரசியமான திருப்பங்களாக ராஜாஜி - பெரியார் திருவண்ணாமலை சந்திப்பு, பெரியார் மணியம்மை திருமணம், அண்ணா - பெரியார் மோதல் நிகழ்வுகள் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள உதவும் சம்பவங்களாகும்.

40 ஆண்டு கால பத்திரிகையாளர் பெற்ற அனுபவங்கள் இந்நூல் எழுத பெரிதும் துணை புரிந்துள்ளன. சுவையான ஆவண நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.