குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும்

News image
Updated On :2 மே 2022, 5:35 am

DIN

ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும் - பேரா. சே. சாரதாம்பாள்; பக். 418; ரூ.400; மீனாட்சி புத்தக நிலையம்,  மதுரை-625 001; 99421-76893.

'ஒப்பிலக்கியம்' என்ற ஓர் இலக்கியம் சென்ற நூற்றாண்டில்தான் தோற்றம் பெற்றுள்ளது. இதன் தாயகம் ஐரோப்பா. பிறகுதான் இது உலகெங்கும் பரவியதாகத் தெரிய வருகிறது. இந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர் ஒப்பிலக்கியத் துறையில் பேராசிரியராக இருப்பதால், அதுகுறித்த ஆழ்ந்த புரிதலுடன் நுட்பமாக சில செய்திகளை இந்தநூலில் பதிவு செய்திருக்கிறார்.

ஆய்வுத் தலைப்புக்கேற்ப இரு பகுதிகளாகப் பகுத்து, முதல் பகுதியில் 'ஒப்பிலக்கியக் கருத்துருவாக்கமும் கோட்பாடுகளும்' எனும் தலைப்பில் பிரெஞ்சு - அமெரிக்கக் கோட்பாடுகள்;  'ஒப்பிலக்கியம்- வரையறை இலக்கணம்' என்ற தலைப்பில் துறை-முறைகள்; 'ஒப்பிலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில், பிறப்புறவு முறை, இலக்கிய வகை, அடிக்கருத்தியல், இலக்கியமும் நுண்கலைகளும், தொன்மமும் தொன்மத் தோற்றச் சூழல்களும் ஆகியவை சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது பகுதியில், சங்கக்கால முருகனுக்கும் கிரேக்க டயோனிசுக்கும் உள்ள தொன்ம உருவாக்கம்;  இணைவரை ஆய்வு என்ற தலைப்பில் குடும்பமும் - திருவள்ளுவரும் அரிஸ்டாட்டிலும்; அடிக்கருத்தியல் எனும் தலைப்பில் வள்ளத்தோளும் - தொன்மப் பாத்திரச் சீதையும் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.

மேலும்,  மானிடவியல் நோக்கில் ஆவிக் கோட்பாடும் - கடவுள் பற்றிய கருத்தாக்கமும்; உளவியல் நோக்கில் ஓரம்போகியாரின் ஆளுமைத்திறன், தெ.பொ.மீ.யின் கானல்வரி, ஐங்குறுநூற்றில் தாயும் சேயும் ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் ஒப்பிலக்கியக் கோட்பாடுகளுடன் பிறதுறை  ஒப்பீடுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.