ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும் - பேரா. சே. சாரதாம்பாள்; பக். 418; ரூ.400; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-625 001; 99421-76893.
'ஒப்பிலக்கியம்' என்ற ஓர் இலக்கியம் சென்ற நூற்றாண்டில்தான் தோற்றம் பெற்றுள்ளது. இதன் தாயகம் ஐரோப்பா. பிறகுதான் இது உலகெங்கும் பரவியதாகத் தெரிய வருகிறது. இந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர் ஒப்பிலக்கியத் துறையில் பேராசிரியராக இருப்பதால், அதுகுறித்த ஆழ்ந்த புரிதலுடன் நுட்பமாக சில செய்திகளை இந்தநூலில் பதிவு செய்திருக்கிறார்.
ஆய்வுத் தலைப்புக்கேற்ப இரு பகுதிகளாகப் பகுத்து, முதல் பகுதியில் 'ஒப்பிலக்கியக் கருத்துருவாக்கமும் கோட்பாடுகளும்' எனும் தலைப்பில் பிரெஞ்சு - அமெரிக்கக் கோட்பாடுகள்; 'ஒப்பிலக்கியம்- வரையறை இலக்கணம்' என்ற தலைப்பில் துறை-முறைகள்; 'ஒப்பிலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில், பிறப்புறவு முறை, இலக்கிய வகை, அடிக்கருத்தியல், இலக்கியமும் நுண்கலைகளும், தொன்மமும் தொன்மத் தோற்றச் சூழல்களும் ஆகியவை சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது பகுதியில், சங்கக்கால முருகனுக்கும் கிரேக்க டயோனிசுக்கும் உள்ள தொன்ம உருவாக்கம்; இணைவரை ஆய்வு என்ற தலைப்பில் குடும்பமும் - திருவள்ளுவரும் அரிஸ்டாட்டிலும்; அடிக்கருத்தியல் எனும் தலைப்பில் வள்ளத்தோளும் - தொன்மப் பாத்திரச் சீதையும் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.
மேலும், மானிடவியல் நோக்கில் ஆவிக் கோட்பாடும் - கடவுள் பற்றிய கருத்தாக்கமும்; உளவியல் நோக்கில் ஓரம்போகியாரின் ஆளுமைத்திறன், தெ.பொ.மீ.யின் கானல்வரி, ஐங்குறுநூற்றில் தாயும் சேயும் ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் ஒப்பிலக்கியக் கோட்பாடுகளுடன் பிறதுறை ஒப்பீடுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தக்கூடாதென எம்எல்ஏ கோரிக்கை

சங்கரன்கோவில் தொகுதியில் ரூ.52 கோடியில் நான்குவழிச் சாலைப் பணி -எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

திருவேங்கடம் வட்டார வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

