தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

DIN

நாட்டுப்புற வேளாண்மை - இரா.மனோகரன், பக்.272, ரூ.270; காவ்யா பதிப்பகம், சென்னை-14. 98404 80232.

வேளாண்மை குறித்த அரிய தகவல்கள் அடங்கிய ஆய்வு நூல் இது. சங்க இலக்கியங்கள், பண்டைய பாரம்பரியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், வளமைச் சடங்குகள் வழியாக வேளாண்மை குறித்த ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. நூலாசிரியர் வேளாண் துறையில் பணிபுரிந்தவர் என்பதால் ஒவ்வொரு தகவலையும் நுணுகி ஆய்ந்து வழங்கியிருக்கிறார்.

வேளாண் தொழிலின் ஆரம்ப நிலை, படிப்படியான வளர்ச்சி நிலைகள் உள்ளிட்டவை நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேளாண் தொழிலை  முதன்முதலில் கண்டறிந்தவர்கள் பெண்கள் என்ற செய்தி வியப்பைத் தருகிறது.

4,000 ஆண்டுகளுக்கு முன்பே கரும்பு பயிரிட்டு வெல்லம் தயாரித்த செய்தியும், வேளாண் தொழில்புரிந்தோரில் குறிஞ்சி மக்கள் ஏனல் உழவர், முல்லை மக்கள் செஞ்சால் உழவர், மருதநில மக்கள் கழனி உழவர், நெய்தல் நில மக்கள் தண்டலை உழவர் என்றழைக்கப்பட்ட செய்தியும் ஆச்சரியமூட்டுகின்றன. நூலுக்கு சிகரம் வைத்தாற்போல சிறப்பிப்பது வேளாண் குறித்த பாடல்களே.

ஏர்ப்பாட்டு, இறவைப் பாட்டு, நடவுப்பாட்டு, களையெடுப்புப் பாட்டு, வண்டிப் பாட்டு, அறுவடைப் பாட்டு, எசப்பாட்டு, வேடிக்கை பாட்டு, கதைப் பாட்டு, வழிபாட்டுப் பாட்டு என நீளும் பாடல்களை சேகரித்து வழங்கிய நூலாசிரியரின் பணி பிரமிப்பைத் தருகிறது.

இயற்கையோடு இயைந்து வாழ வேண்டிய மனிதர்களுக்கு வேளாண்மை என்பது தொழில் அல்ல தொண்டு; பணி அல்ல பண்பாடு என்பதை ஆய்வு வழி நிறுவுகிறது இந்நூல். வாசித்து பாதுகாக்க வேண்டிய அரிய நூல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.