விந்தன் கதைகள் (25 கதைகள்) - விந்தன்; பக். 208; ரூ.150; முல்லை பதிப்பகம், சென்னை- 40; 98403 58301.
இந்த நூலுக்கு முன்னுரையை ஆசிரியர் கல்கி எழுதியிருக்கிறார். அதன் சாராம்சம்: ஒரு காலத்தில் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த எழுத்தாளர்கள் அதிகம் இருந்தார்கள்.
அவர்களது சாதியைச் சார்ந்தவர்களே சிறுகதை- நாவல்களைப் படிக்கிறவர்களாக இருந்தார்கள்.
மற்ற சாதியாரைப் பற்றி இந்த எழுத்தாளர்கள் எழுதினால் நடை, உடை, பாவனைகள் அவ்வளவு சரியாக இருக்காது. காட்டிக் கொடுத்துவிடும். உண்மை ஒளிவீசும் சிறுகதையை எழுதுவதற்கு எளியவர்கள்- உழைப்பாளி மக்களிடையே ஆசிரியர்கள் தோன்ற வேண்டும்.
அந்த எழுத்தில் இலக்கிய மணம் பொருந்த வேண்டும். இந்த லட்சணங்கள் பொருந்தியவர் விந்தன் என்கிற வி.கோவிந்தன்'' என்கிறார் கல்கி. 'வாழப் பிறந்தவன்', 'மனித யந்திரன்', 'ரிக்ஷாவாலா', 'நாத்தனார்' உள்ளிட்ட 25 தலைப்புகளில் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கதைகளில் பாட்டாளியின் துயரத்தையும், விவசாயிகளின் வேதனைகளையும், ஏழை எளியவர்களின் வாழ்க்கை அவலத்தையும், அவர்களின் சுக துக்கங்களையும் உறவுச் சிக்கல்களையும் பதிவு செய்திருக்கிறார் விந்தன்.
வாழ்க்கை, காதல், தெய்வம், உறவினர்கள், பண்டிகை என்று பல்வேறு விஷயங்களை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீதியை வெளிப்படுத்துகின்றன. சிறுகதை வாசிப்போருக்கு பயனுள்ள நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - கௌரவ் கோகோய்..! அசாம் காங்கிரஸ் வெளியிட்ட விடியோ!

பாசுமதி அரிசி விலை குறைகிறதா?
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

