சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

அமெரிக்க உள்நாட்டுப் போர் - வானதி; பக்.224; ரூ.260; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; ✆ 044-42009603.

சரியான காரணத்தோடு நன்மையின் பொருட்டு நடைபெற்ற போர்களில் ஒன்று 'அமெரிக்க உள்நாட்டுப் போர்'.

கருப்பின மக்களுக்கு விடுதலை அளித்து அடிமை முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்தப் போர் மனித குல வரலாற்றில் ஒரு மைல் கல். எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்ந்தவர் கிடையாது என்று வடக்கு மாகாணங்களும், தங்களது தோட்டங்களுக்கு அடிமைகளின் உழைப்பு அவசியம் என தெற்கு மாகாணங்களும் கொள்கை அளவில் வேறுபட்டன.  இந்த வேறுபாடு அரசியல், தேர்தல், நாடாளுமன்றம் என படிப்படியாக பல்வேறு தளங்களில் காத்திரமாக எதிரொலித்து உள்நாட்டுப் போருக்கு எப்படி இட்டுச் சென்றது என்பதை இந்நூல் விவரிக்கிறது.

போரால் நாடு இரண்டாகப் பிரிவதை எந்தச் சூழலிலும் ஆப்ரகாம்  லிங்கன் விரும்பவில்லை.  அவரது ஆட்சிக்காலத்தின் பெரும் பகுதியை உள்நாட்டுப் போர் விழுங்கியதோடு மட்டுமல்லாது, அவருடைய உயிரையும் பறிக்க காரணமாயிற்று.  போர் சுமார் 10 லட்சம் பேரை பலிகொண்டு முடிவுற்றது. ஆனாலும் இன்றைக்கும் அந்நாட்டில் நிறவெறி நிலவுவது வேதனை அளிக்கிறது.
அமெரிக்கப் பேரரசின் அடிப்படை வரலாறு, நிலப்பரப்பு, ஆப்ரகாம் லிங்கனின் அசாத்திய தலைமைப் பண்பு, முதல் போர், தீபகற்ப போர், விக்ஸ்பர்க் முற்றுகை, பீட்டர்ஸ்பர்க் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை இந்நூல் எடுத்தியம்புகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.