கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

DIN

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு - கோ.செங்குட்டுவன்; பக்.520; ரூ.600; கிழக்குப் பதிப்பகம், சென்னை -14; ✆ 044-42009603.

புதுச்சேரி கிழக்கிந்திய கம்பெனியில் துபாஷியான (மொழிபெயர்ப்பாளர்) ஆனந்தரங்கப்பிள்ளை 1736 முதல் 1761 வரை 25 ஆண்டுகள் எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பே இந்த நூல். வணிகர், தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர், ஆளுமைமிக்க நிர்வாகி, 'ஆனந்தரப் புரவி' எனும் கப்பல் உரிமையாளர் என பன்முகத் தன்மையுடைய அவர், புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்குள் எந்த நேரத்திலும் பல்லக்கில் செல்லும் அளவுக்கு தனி உரிமை பெற்றவர்.

அன்று சமூகப் பொருளாதாரப் பண்பாடு, ஆட்சி மாற்றம், போர்ச்சூழல், அரசியல் விவகாரங்கள், அன்றாட நிகழ்வுகள், சடங்குகள், திருவிழாக்கள், பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துகள் உள்ளிட்டவற்றை விவரமாக விருப்பு வெறுப்பின்றி இந்நாட்குறிப்பு பட்டியலிடுகிறது.

அன்றைய புதுச்சேரியில் சுமார் 6 மாதங்கள் மதுவிலக்கு அமல், கிறிஸ்தவர்கள்- ஹிந்துக்கள் இடையே எழுந்த பிரச்னைகள், புயல் காற்று, சென்னப்பட்டணத்தை கைப்பற்றிய பிரெஞ்சுக்காரர்கள், புதுச்சேரியை முற்றுகையிட்ட பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சு ஆட்சியில் குற்றமும், தண்டனையும் உள்ளிட்ட பல நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்குறிப்பை படித்து பாரதியார், வ.வே.சு. ஐயர், வரலாற்று ஆசிரியர் ஸர்.பிரடெரிக் உள்ளிட்டோர் சான்று பகர்ந்துள்ளனர்.

சுதந்திரத்துக்கு முந்தைய புதுச்சேரியின் முகத்தை அறிய உதவும் நல்லதொரு நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.