எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

40 பிளஸ் மாற்றம்

பெண்களின் உடல், மன பிரச்னைகளுக்கு தெளிவை ஏற்படுத்துவதற்கும் துணை நிற்கும் இந்த நூல்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:23 pm

DIN

40 பிளஸ் மாற்றம் - வள்ளியம்மை அருணாசலம்; பக்.230, ரூ.220; சில்வர்'ஃ'பிஷ் பதிப்பகம், குரோம்பேட்டை, சென்னை-44; ✆73059 10955.

வாழ்க்கையில் இருந்து கற்ற அனுபவங்களையும், அவை தந்த படிப்பினைகளையும் எடுத்துரைக்கும் நூல் இது. நூலாசிரியர் தான் பிறந்து வளர்ந்தது முதல்

திருமணமாகி 40 வயதை எட்டும் வரை நிகழ்ந்த நிகழ்வுகளையும், கசப்புகளையும், உணர்வுகளையும் மிக எளிமையாக வாசகர்களுக்கு கடத்தியிருக்கிறார்.

சம்பவங்களை அளிக்காமல் தனது தவறுகளையும், அதனைத் திருத்திக் கொண்ட முயற்சிகளையும் கூறியிருக்கிறார். உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு ஆட்பட்டு எதிர்மறை

எண்ணங்களால் சூழப்பட்ட ஒரு பெண், எவ்வாறு அதிலிருந்து விடுபட்டு உலகை எதிர்கொள்கிறார் என்பதுதான் நூலின் கருவாக இருந்தாலும், அதற்குள்ளே அவர் முன்வைக்கும் பல பதிவுகள் வாசகர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் கடந்து வந்த அனுபவங்களாக இருக்கும்.

'பெண் குழந்தைகளை சமூக கயவர்களுக்கு காட்டாமல் பாதுகாப்பாக வளர்ப்பதில் பயனில்லை. மாறாக, ஒவ்வொரு குழந்தையையும், மற்ற குழந்தைகளை மதிக்க கற்றுக் கொடுத்தால்தான் ஆரோக்கியமான சமூகம் உருவாகும்' என்கிறார் நூலாசிரியர்.

தொடர்ச்சியாக ஏற்பட்ட உடல் ரீதியான நோய்கள், உளவியல் பாதிப்புகளுக்கு அலோபதி மருத்துவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான சிகிச்சைகளை வழங்கியதையும், அதன் பின்னர், தனது வாழ்வில் மறக்க முடியாத சில மருத்துவர்கள் வந்து சில அற்புதங்களை நிகழ்த்தியதையும் நூலில் விவரித்துள்ளார்.

ஒவ்வொரு சிக்கலையும் புரிந்து, தெளிந்து அணுக வேண்டும் என்றும் அவர் அறிவுரைக்கிறார். ஆண்-பெண் உறவிலான புரிதல்களை அறியவும், குறிப்பாக, பெண்களின் உடல், மன பிரச்னைகளுக்கு தெளிவை ஏற்படுத்துவதற்கும் துணை நிற்கும் இந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.