எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நிறம் மாற்றும் மண்

நமது நாட்டின் பல அற்புதப் பண்புகள் போற்றிக் காப்பாற்றப்பட வேண்டியவை என்ற நூலாசிரியரின் கருத்துகளுக்கு ஒவ்வொரு கட்டுரையும் வலிமை சேர்க்கின்றன.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:20 pm

DIN

நிறம் மாற்றும் மண் - இயகோகா சுப்பிரமணியம்; பக்.208; ரூ.200; குமரன் பதிப்பகம், சென்னை-17; ✆044- 2435 3742.

உலகிலேயே பெரும் வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்கா, அனைத்து நாடுகளின் மீதும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேலைவாய்ப்புக்காக, சுற்றுலாவுக்காக அல்லது அதன் பிரம்மாண்டத்துக்காக அமெரிக்கா மீதான ஈர்ப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கும்.

அந்த வகையில் நூலாசிரியரின் இந்தப் பயண அனுபவ நூல் அமெரிக்காவின் அனைத்துப் பக்கங்களையும் தெளிவுபடுத்த முயற்சித்துள்ளது. அமெரிக்க சமூக வாழ்க்கை முறைகளை

இந்திய சமூக வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் மிகவும் சிறப்பு.

ஒரு தனி மனிதனுக்கு எந்த வகையிலும் தேவையில்லாத துப்பாக்கி அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக விற்பனையாகிறது. 'அந்தத் தொழிலால் கோடிகளையும் அதிகாரத்தின் உச்ச வரம்பையும் தொட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம், சின்ன சின்ன இழப்புகளைக் கண்டும் காணாமல் மனித இனத்துக்கு மாபெரும் துரோகத்தைச் செய்துகொண்டிருக்கிறது' எனும் வரிகள் அமெரிக்காவின் துப்பாக்கி கலாசார கொடூரத்தை தோலுரித்துக் காட்டுகின்றன.

அதேவேளையில், அரசாங்கம் போட்ட சட்டத்தை அப்படியே பின்பற்றுகின்ற அமெரிக்க மக்களின் ஒழுக்கத்தை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும்

பல்வேறு நிகழ்வுகளுடன் கூறியுள்ளார் நூலாசிரியர். அமெரிக்காவின் பல சிறப்புகள் நம்மால் பின்பற்றப்பட வேண்டியவை; நமது நாட்டின் பல அற்புதப் பண்புகள் போற்றிக் காப்பாற்றப்பட வேண்டியவை என்ற நூலாசிரியரின் கருத்துகளுக்கு ஒவ்வொரு கட்டுரையும் வலிமை சேர்க்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.