உயர் சாதி இந்துப் பெண் - பண்டித ரமாபாய் (மொழிபெயர்ப்பு: முனைவர் ஜா. கிறிஸ்டி பெமிலா); பக்.118; ரூ.160; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை-83; ✆96003 98660.
1858-இல் பிறந்த ரமாபாய், பண்டிதரான தனது தந்தை மூலமாகவே சம்ஸ்கிருதம் கற்று புலமை பெற்று, 'பண்டித' என்கிற பட்டத்தை கொல்கத்தா பல்கலைக்கழகம் வாயிலாகப் பெறுகிறார். 1883-இல் இங்கிலாந்து சென்று மருத்துவக் கல்வி பெற முயற்சித்தபோது, காது கேளாமையால் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர், கிறிஸ்தவராக மதம் மாறினார்.
இந்தியா திரும்பிய அவர் புணேயில் இளம் விதவைகளின் கல்விக்காக 'சாரதா சதன்' என்ற கல்விக்கூடத்தை பலரின் நிதி ஆதரவைப் பெற்று தொடங்கினார். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல், இளம் விதவைகளின் நிலை, சிசுக் கொலை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.
ஆணுக்கு நிகராகப் பெண்ணுக்கும் அனைத்து உரிமைகளும் இருக்க வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் அவர். 1887-இல் அவர் எழுதி வெளியிட்ட ஆங்கில நூலின் தமிழாக்கமே தற்போது வெளிவந்துள்ளது.
'இந்தியாவில் குழந்தைப் பிறப்போடு தொடர்புடைய மனபாரமும் மனவருத்தமும் எந்தவொரு நாட்டிலும் காண முடியாதது' என்று அவர் குறிப்பிடுவது இன்றைக்கும் பொருந்தும்.
ஆண்வழிச் சமூகத்தின் தாக்கங்கள், கல்வி போன்ற முன்னேற்றங்களால் சற்று மாறியிருந்தாலும், பெண்களுக்கு சமூகத்தில் உரித்தான உண்மையான இடம் இன்றும்கூட கிடைத்துவிடவில்லை என்பதே நிதர்சனம்.
கால மாற்றத்தால் சில வாய்ப்புகள் பெண்களை அடைந்துள்ளன என்றாலும், அவர் 1887-இல் எழுதியது, பெண்களைப் பொறுத்தவரை, சமய, சமூகப் பாகுபாடின்றி இன்றும் உண்மையாகவே இருக்கிறது என்று சமகாலச் செய்திகள் நமக்குச் சொல்கின்றன. பெண்ணிய நூல்களில் முக்கியமான பதிவு இந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வேளாண் சமூகக் கட்டமைப்பு

ஒளவையின் செந்தமிழ்ப் புதையல்
திருவள்ளுவரின் அறிவுக் கோட்பாடு
குறள் விருந்து! கதை விருந்து!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...