எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அலைபேசியுடன் நாம்

வளரிளம் பருவத்தில் உள்ளவர்களும், அவர்களது பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2024, 11:10 am

DIN

அலைபேசியுடன் நாம் - வள்ளியம்மை அருணாசலம்; பக்.76; ரூ.95; சில்வர் 'ஃ'பிஷ் பதிப்பகம், சென்னை - 44; 73059 10955.

அலைபேசி நம் வாழ்வை எப்படியெல்லாம் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், அதன் சாதக, பாதகங்களையும் தெரிவிக்கும் குறுங்கட்டுரைகளின் தொகுப்பு இது.

அலைபேசி கண்டறிவதற்கு முன்பு இருந்த சூழல் எப்படியிருந்தது என்பதில் தொடங்கி, தற்போது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் என டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி வரையிலும் பல்வேறு விஷயங்களை அலசியிருக்கிறார் நூலாசிரியர்.

பொதுவாக, அனைத்துக் கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் விமர்சனங்களுக்குட்பட்டே சமூகத்துக்கு அறிமுகமாயிருக்கின்றன எனக் கூறும் அவர், அந்த வகையில் அலைபேசிகள் நம்முள் ஊடுருவி எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதை சுவாரசியமாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குறுங்கட்டுரையின் முடிவிலும் அலைபேசி குறித்த அறிவியல் தகவல்களையும், தரவுகளையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு.

மது, புகையைப் போலவே மனிதர்களை அடிமையாக்கிக் கொள்ளும் அலைபேசியின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளும் நூலின் பல கட்டுரைகளில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்தும் அதற்கான உத்திகளைப் பெற்று வாசகர்களுக்கு அளித்துள்ளார் நூலாசிரியர்.

ஒருபக்கம் அலைபேசியின் வலைக்குள் சிக்கித் தவித்து வந்தாலும், மற்றொரு பக்கம் அதன் அத்தியாவசியத்தை புறந்தள்ள முடியாது என்ற உண்மையை கட்டுரையில் உணர்த்தியுள்ளார். வளரிளம் பருவத்தில் உள்ளவர்களும், அவர்களது பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.