எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முல்லைப் பெரியாறு - தொடரும் தொல்லைகள்

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 9:24 am

DIN

முல்லைப் பெரியாறு - தொடரும் தொல்லைகள் - கம்பம் அப்பாஸ்; பக். 288; ரூ.200, கொங்குமண்டல ஆய்வு மையம், உடுமலை.காம், உடுமலைப்பேட்டை; ✆73737 37740.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடும் விவசாயிகள் தலைவரான நூலாசிரியர் எழுதியுள்ள வரலாற்றுப் பதிவு இந்த நூல். நூறாண்டுகளுக்கு முன் அணை கட்டும் யோசனை ஏற்பட்டது பற்றியும் கர்னல் பென்னிகுயிக் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டார் என்பது பற்றியும் தொடக்கத்திலேயே தெரிவிக்கிறார் ஆசிரியர்.

அணையைச் சார்ந்த அன்றைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உருவான, இன்றும் பயன்பெறும் பாசன அமைப்புகளும் விளக்கப்படுகின்றன. அணை கட்டுமானப் பணியின்போது உயிரிழந்த ஆங்கிலேயர்களின் கல்லறைகள் பற்றிய தகவல்களையும் தருகிறார் ஆசிரியர்.

அணையின் வரலாற்றுடன் அதன் பாசனத் திட்டங்கள், பயன்பெறும் பாசனப் பகுதிகள் பற்றியெல்லாம் தொழில்நுட்ப விவரங்களையும் இணைத்தே தரும் நூலாசிரியர், தொடர்பான குடிநீர், மின்னுற்பத்தித் திட்டங்களையும் விவரிக்கிறார்.

1978 ஜூலை முதல் வாரம் தொடங்கி மலையாள நாளிதழொன்றில், 'முல்லைப் பெரியாறு அணை உடைபடும் அபாயம், நீர்க்கசிவு அதிகரிப்பு, இடுக்கி மாவட்டமே அழியும்', என்று வெளியான தொடர் செய்திகள்தான் கேரள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தித் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக மாற்றின. இதன் தொடர்ச்சியாக வைகோ உள்பட விவசாயிகளின் போராட்டங்கள், சட்டப் பிரச்னைகள், நீதிமன்ற வழக்கு விவரங்களை நேரில் கண்ட சாட்சியமாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

அணையைப் பற்றி முழுமையாகக் களத்தில் இருப்பவர் வழி அறிய உதவும் சிறந்த ஆவணம் இந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.