எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

DIN

அம்மா முதல் அயலான் வரை அடடே கதைகள் - யுவா; பக்.392; ரூ.444; சுட்டி மீடியா, சென்னை-45; ✆98409 69757.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சிறார் கதைகளை எழுதத் தொடங்கிய கே.யுவராசன் தனது புனைபெயரான 'யுவா' என்ற பெயரில், பல்வேறு இதழ்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு இந்த நூல். பழங்குடியினர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக 'அலை' என்ற அமைப்பை தனது நண்பர்களோடு இணைந்து நடத்தி வரும் அவர் பணிகளுக்கு இடையே தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்திவருகிறார்.

அம்மா கதைகள், அப்பா கதைகள், அரசர் கதைகள், அஃறிணைக் கதைகள், அன்புக் கதைகள், அறிவுக் கதைகள், அஞ்சாமைக் கதைகள், அதிசயக் கதைகள் என்ற 8 தலைப்புகளில், அவை ஒவ்வொன்றிலும் தலா எட்டு கதைகளாக ஏற்கெனவே சிறுநூல்களாக வெளிவந்துள்ளன. சிறு நூல்களின் தொகுப்பே இந்த நூல்.

அறுபத்து நான்கு கதைகளும் தனித்துவத்தோடு இருக்கின்றன. சிறார்களிடம் அன்பு, அறிவு, ஆற்றல், இனிமை, ஈகை குணம், உழைப்பு, ஊருக்கு உழைத்தல், மூடநம்பிக்கைகளை விட்டொழித்தல்... என்று பல்வேறு தனித்திறன்களை வளர்க்கும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்தக் கதைகள் இருக்கின்றன. பெரியோரை மதித்தல், ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தல், அச்சம் தவிர்த்தல் என்று தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, அவர்களை எதிர்காலத்தில் சிறந்து விளங்கவைப்பதற்கான கதைகள்தான் இவை. சிறார்கள் கதைகள் என்று நினைத்துவிட முடியாமல், அனைத்துத் தரப்பினரும் படிக்கும் வகையில்தான் இந்தக் கதைகள் இருக்கின்றன. ஓவியர் அரஸின் சித்திரங்கள் கூடுதல் சிறப்பு.

கல்வி நிலையங்களின் நூலகங்களில் அவசியம் இடம் பெற வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.